இந்தியா

மெட்ரோ ரயிலில் கொட்டிய மாணவனின் மதிய உணவு.. அதன்பின் நடந்தது தான் டுவிஸ்ட்!

Published

on

மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மாணவனின் மதிய உணவு திடீரென கொட்டியதையடுத்து அந்த மாணவன் செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தனது பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அவருடைய மதிய உணவு அடங்கிய டிபன் பாக்ஸ் கீழே விழுந்து அதிலிருந்த உணவு மொத்தமும் தரையில் கொட்டியது.

இதனை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த இடத்தை விட்டு அப்படியே செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அவர் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்து சில தாள்களே கிழித்து அதில் கூடிய உணவை அள்ளி அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். மேலும் தனது கைக்குட்டையை எடுத்து அந்த இடத்தை நன்றாக சுத்தமாக்கினார். உணவு கொட்டுவதற்கு முன்னர் அந்தப் பகுதி எவ்வாறு சுத்தமாக இருந்ததோ அதே போன்று சுத்தமாக ஆன பின்னரே அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

இதனை அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சக பயணிகள் வீடியோ எடுத்து தங்களது தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் மாணவன் தான் அசுத்தமாக்கிய இடத்தை சுத்தம் செய்வது அவரது கடமை என்றும் இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்றும் சிலர் கூறியுள்ளனர். மேலும் சிலர் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது சர்வ சாதாரணம் என்றும் நம் நாட்டில் நடந்தால்தான் இது ஆச்சரியமான செய்தியாக வருகிறது என்றும் கூறியுள்ளனர்.

Trending

Exit mobile version