தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம், வட சென்னையில் குத்துச்சண்டை மைதானம்: முதல்வரின் அதிரடி அறிவிப்பு

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று விளையாட்டு துறைக்கு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டதை அடுத்து விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் சமுதாயத்தின் வலிமை என்பது உடல் மற்றும் மனரீதியான வலிமையைப் பொறுத்தது என்று கூறி விளையாட்டு துறைக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார் .

இதன்படி சென்னை அருகே பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் இந்நகரம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தார் .

மேலும் தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 22 கோடியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சிலம்பம் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலையில் 3 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என தனி மைதானம் அமைக்கப்படும் என்றும் வடசென்னையின் ரூபாய் 10 கோடி மதிப்பில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விளையாட்டு துறையில் வீரர்கள் வீராங்கனைகள் இறங்குவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Trending

Exit mobile version