உலகம்

அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரில் ஒரு தெரு!

Published

on

திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழில் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த குரளில் உள்ள கருத்துக்கள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்று திருக்குறள் என்பது குறிப்பிடதக்கது.

அவ்வாறு உலகப் புகழ்பெற்ற திருக்குறளுக்கு தற்போது மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் ஒரு தெருவுக்குறு பெயர் சூட்டப்பட இருக்கிறது. வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஃபேர்பேக்ஸ் என்ற மாகாணத்தில் உள்ள தெருவுக்கு வள்ளுவர் தெரு என்று அழைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் valluvar Way என்றும் தமிழில் வள்ளுவர் தெரு என்றும் அழைக்கப்படும் என வெர்ஜீனியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெருமைக்குரியதாக கருதப்படுவதால் ஒட்டுமொத்த தமிழர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version