இந்தியா

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த கொரோனா.. விமானங்கள் நிறுத்தப்படுமா?

Published

on

சீனாவிலிருந்து இந்தியா திரும்பும் நபர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து தற்போது சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகள் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து ஆக்ரா வந்த விமான பயணிகளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாகவும் இதனை அடுத்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

அதேபோல் சீனாவில் இருந்து பெங்களூரு திரும்பிய மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய் மகள் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தற்போது விருதுநகர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுடைய ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலையின்போது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் தான் இந்தியாவில் மிக அதிக அளவில் கொரனோ வைரஸ் பரவியது என்றும் அதனால் கோடிக்கணக்கான மக்கள் லாக்டவுன் என்ற சங்கடத்தை அனுபவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த முறையாவது கொரோனா வைரஸ் தொற்று ஆரம்ப காலத்தில் இருக்கும்போதே இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஒரு சிலரும் அவதிப்பட்டாலும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதே பலரது கருத்தாக உள்ளது. இதனை மத்திய அரசு பரிசீலனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Trending

Exit mobile version