தமிழ்நாடு

ஐடிஐ படித்தவர்களுக்கு 10, 12 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்: மேற்படிப்பு படிக்க உதவும்!

Published

on

ஐடிஐ படைத்த மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முறையாக படித்து தொழில் பயிற்சி கல்வி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என சற்றுமுன் வெளியாகியுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல் எட்டாம் வகுப்பு முறையாக படித்துவிட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பத்தாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இந்த சான்றிதழை வைத்து அவர்கள் மேற்படிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐஐடி யில் படித்த மாணவ-மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version