வணிகம்

8வது ஊதியக்குழு அமலாக்கம்: சம்பள உயர்வு எப்போது? Fitment Factor எவ்வளவு இருக்கும்?

Published

on

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக்குழு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 7வது ஊதியக்குழுவில் அறிமுகமான சம்பள மேட்ரிக்ஸ் முறை (Pay Matrix System) 8வது குழுவிலும் தொடரும் எனவும், இதில் Fitment Factor மட்டுமே மாற்றப்படலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Fitment Factor என்றால் என்ன?

புதிய சம்பளக் குழுக்கள் அமைக்கப்படும் போது, பழைய அடிப்படை ஊதியத்தை ஒரு குறிப்பிட்ட Fitment Factor-ஆல் பெருக்கி புதிய அடிப்படை ஊதியம் கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் அடிப்படை சம்பள உயர்வு அமல்படுத்தப்படும்.

8வது ஊதியக்குழுவில் Fitment Factor

8வது ஊதியக்குழுவில் Fitment Factor 1.92 முதல் 3.0 வரை இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நிபுணர்கள், இது 2.46 ஆக நிர்ணயிக்கப்படும் என்று கருதுகின்றனர்.

7வது ஊதியக்குழுவில் Fitment Factor 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 8வது குழுவில் சிறிய மாற்றத்துடன் 2.46 ஆக இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

சம்பள உயர்வு எவ்வளவு?

தற்போது நிலை 1 மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. புதிய Fitment Factor-க்கு ஏற்ப அது பின்வருமாறு உயரும்:

  • 1.92 Factor – ரூ.34,560
  • 2.08 Factor – ரூ.37,440
  • 2.28 Factor – ரூ.41,040
  • 2.57 Factor – ரூ.46,260
  • 2.86 Factor – ரூ.51,480
  • 3.00 Factor – ரூ.54,000

இதனால், 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு, அடிப்படை சம்பளம் ரூ.18,000 இல் இருந்து ரூ.44,000 – 54,000 வரை உயர வாய்ப்பு உள்ளது.

யார் யார் பயனடைவார்கள்?

புதிய சம்பள குழுவின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாக பலன் பெறுவார்கள்.

அகவிலைப்படி நிலை

ஒவ்வொரு புதிய சம்பளக் குழுவிலும் போல, 8வது குழுவிலும் அகவிலைப்படி (DA) பூஜ்ஜியம் ஆகத் தொடங்கி, பணவீக்கம் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கும்.

8வது ஊதியக்குழுவில் சம்பள மேட்ரிக்ஸ் முறையில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால், Fitment Factor-ல் ஏற்படும் மாற்றம் ஊழியர்களுக்கு பெரும் உயர்வை தரும்.

Trending

Exit mobile version