ஆரோக்கியம்
டீ குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய 6 முக்கிய பழக்கங்கள் – ஆரோக்கியத்திற்கு பெரிய பாதிப்பு!
Published
1 வாரம் agoon
By
Poovizhi
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீ ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் டீ குடிப்பது மட்டுமல்ல, அதை எப்படி மற்றும் எப்போது குடிக்கிறோம் என்பதும் உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பலர் அறியாமல் சில தவறான பழக்கங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1) அதிக சர்க்கரை சேர்த்து டீ குடிப்பது:
டீயில் அதிக சர்க்கரை சேர்ப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும். இது நீண்ட காலத்தில் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே, சர்க்கரையை குறைத்து அல்லது பிளாக் டீயாக குடிப்பது நல்லது.
2) வெறும் வயிற்றில் அல்லது இரவில் டீ குடிப்பது:
காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லை ஏற்படலாம். அதேபோல் இரவில் குடிப்பதால் தூக்கமின்மை ஏற்படும். அதற்கு பதிலாக காலை தண்ணீர் குடிப்பதும், இரவில் மூலிகை பானங்களை குடிப்பதும் நல்லது.
3) அதிகமாக க்ரீன் டீ குடிப்பது:
க்ரீன் டீயில் உள்ள டானின்கள் மற்றும் கேட்டசின்கள் உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை தடுக்கலாம். இது ரத்த சோகை பிரச்சனையை மோசமாக்கும். மேலும் அதிகமாக குடித்தால் எலும்பு பலவீனம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
4) மிகவும் சூடான டீ குடிப்பது:
சுடச்சுட டீ குடிப்பது நாக்கு, உதடு மற்றும் உணவுக்குழாயை பாதிக்கக்கூடும். இதனால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வாய்ப்புண்கள் ஏற்படலாம்.
5) டீயுடன் பிஸ்கட், பப்ஸ் சாப்பிடுவது:
டீ மற்றும் மைதா உணவுகள் சேர்ந்து சாப்பிடும்போது அமிலச் சுரப்பு அதிகரித்து நெஞ்செரிச்சல் ஏற்படும். மேலும், இவை உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
6) உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிப்பது:
டீ குடித்த பிறகு நெஞ்செரிச்சல், வயிற்று அசௌகரியம் போன்றவை ஏற்பட்டால் அதை உதாசீனப்படுத்தக்கூடாது. சில நாட்கள் டீயை தவிர்த்து உடல்நிலை மேம்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.













