உலகம்

50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த டாக்டர்.. செஞ்சுரி அடிக்க போவதாக பேட்டி!

Published

on

50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த மருத்துவர் ஒருவர் இன்னும் குழந்தைகள் பெறுவதற்காக திருமணம் செய்யப்போவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் குடும்ப கட்டுப்பாடு என்ற முறையை இந்தியா உள்பட பல நாடுகள் கடைபிடித்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் 50 வயதை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது மூன்று மனைவிகள் மூலம் 60வது குழந்தைகள் பெற்றெடுத்து உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹாஜி ஜான் முகமது. இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 60வது குழந்தை பிறந்துள்ளது. ஹாஜி ஜான் முகமதுவுக்கு மூன்று மனைவிகள் உள்ளனர் என்பதும் அவரது மனைவிகள் அடுத்தடுத்து கர்ப்பமாகி குழந்தை பெறுவதை முழு நேர தொழிலாக வைத்திருக்கின்றனர் என்றும் தெரியவந்தது.

இந்த நிலையில் மூன்று மனைவிகள் மூலம் ஏற்கனவே 59 குழந்தைகளை பெற்ற ஹாஜி ஜான் முகமது தற்போது 60வது குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விரைவில் நான்காவது திருமணம் செய்ய பெண் பார்க்குமாறு தனது நண்பர்களிடம் கூறி உள்ளதாகவும் விரைவில் நான்காவது திருமணம் செய்து இன்னும் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாஜி ஜான் முகமது ஒரு மருத்துவர் என்பதும் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் அவர் சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள நிதி நிலையில் பாதிப்பு அடைந்தாலும் தான் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்த போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மினி கிராமத்தையே உருவாக்கியுள்ள அவர் தனது 60வது மகனுக்கு குஷால் கான் என்று பெயர் வைத்துள்ளார். தன்னுடைய 60 குழந்தைகளில் 5 குழந்தைகள் மட்டும் இறந்து விட்டனர் என்றும் தற்போது உயிருடன் உள்ள 55 குழந்தைகளின் பெயர்கள் எனக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

59 குழந்தைகளை பெற்றெடுத்த ஒருவர் 60வது குழந்தைக்கு பின்னர் இன்னும் திருமணம் செய்து மேலும் குழந்தைகளை பெற வேண்டும் என்றும் குழந்தைகள் பெறுவதில் செஞ்சுரி அடிக்க அவர் தீவிரமாக இருப்பதாகவும் அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version