தமிழ்நாடு

தமிழில் தேவாரம் பாட முயன்ற 50 பேர் கைது: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரபரப்பு

Published

on

சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்து தமிழில் தேவாரம் பாட முயற்சி செய்தால் 50 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழில் தேவாரம் பாட ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று சிதம்பரம் கோவிலை நோக்கி சென்றனர். ஆனால் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி அவர்கள் சிதம்பரம் கோவிலுக்குள் சென்று தேவாரம் பாட முயற்சித்த நிலையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து அவர்கள் சிதம்பரம் கோயிலில் தேவாரம் தமிழில் பாட வேண்டும் என்ற கோஷம் எழுப்பி கைதாகினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version