கிரிக்கெட்

தென்னாபிரிக்காவை திணறடித்த இந்திய இளம் அணி: இமாலய இலக்கு!

Published

on

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் இறங்கி அதிரடியாக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இஷான் கிஷான் 48 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். ருத்ராஜ் கெய்க்வாட் 23 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களும். கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்களும் எடுத்தனர். கடைசியாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார்.

இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நிமிடங்களில் தென் ஆப்பிரிக்கா அணி 212 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாட உள்ளது. அந்த அணி இலக்கை எட்டுமா? அல்லது இந்திய பந்து வீச்சாளர்கள் சுருட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 13 டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version