உலகம்

தினமும் பலமுறை சுய இன்பம்: ஐ.சி.யூவில் அட்மிண்ட் ஆன 20 வயது வாலிபர்!

Published

on

20 வயது வாலிபர் ஒருவர் தினமும் அதிக முறை சுய இன்பம் செய்ததால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் தினமும் அதிக முறை சுய இன்பம் செய்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது என்பதும் நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக சுய இன்பம் காரணமாக தான் நெஞ்சுவலி அவருக்கு வந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுய இன்பம் செய்வது சரியா தவறா என்ற கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் திடீரென அதிக முறை சுய இன்பம் செய்வதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version