Connect with us

தமிழ்நாடு

ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் ரூ.2.63 லட்சம் கடன்: வெள்ளை அறிக்கையில் திடுக் தகவல்!

Published

on

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் சற்று முன் கடந்த 10 ஆண்டுகளுக்கான நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வெள்ளை அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கப்பட்ட மூன்று லட்சம் கோடி கடனில் 50 சதவீதம் வருவாய் பற்றாக்குறைக்கு செலவு செய்யப்பட்டது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது

பொருளாதார சரிவுக்கு கொரோனா வைரஸ் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும் உலகத்தில் கொரோனா அறிமுகமாகும் முன்னரே தமிழகத்தில் பொருளாதார சரிவு ஏற்பட்டு விட்டது

மத்திய அரசின் வரி பங்கீட்டில் தமிழகத்தின் பங்கு முழுமையாக வந்து சேரவில்லை.

2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் வருமானம் உபரியாக இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,926 கடன்சுமை உள்ளது

தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்துள்ளதால் வட்டி அதிகரித்துக் கொண்டே வருகிறது
அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் தொகை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறையை ஒன்றரை லட்சம் கோடியாக இருந்ததால் நிதிப்பற்றாக்குறை அதைவிட பல மடங்கு உயர்ந்து விட்டது

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் நாலில் ஒரு பங்கு குறைந்து விட்டது

2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆகும்.. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது

கடைசி ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த கடன் என்ற கேள்வி உள்ளது

தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி பீகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளது. தமிழகத்தை ஒப்பிடுகையில் பீகார் மின்வாரியத்தின் நிலைமை நன்றாக உள்ளது

தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது!

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடி; 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடி

இவ்வாறு வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?