செய்திகள்
2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் எடப்பாடி

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சென்ற வாரம் 2026 தேர்தலுக்கான அதிமுகவின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.
முதல்கட்டமாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், குல விளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2,000 ரூபாய், நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம், அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், 25 ஆயிரம் ரூபாய் மனியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தார்.
இன்று காலை தனது 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார் எடப்பாடி.
மாணவர்களின் கல்விக்கடனை அரசே ஏற்கும்.
ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
முதியோர் ஓய்வுதியம் ரூ2000 ஆக அதிகரிக்கப்படும்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் ஓய்வுதியம் உயர்த்தப்படும்.
ஜல்லிக்கட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10லட்சம் வழங்கப்படும்.
அரசால் அங்கீகரிக்கப்படும் இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.













