தமிழ்நாடு

17 வயதில் பல ஆண் நண்பர்கள்: கண்டித்த தாயை கொலை செய்த சிறுமி!

Published

on

17 வயதில் பல ஆண் நண்பர்கள் இருந்ததை கண்டித்த தாயை அந்த சிறுமி ஆண் நண்பர்கள் உதவியால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு 17 வயது மகள் இருக்கிறார். கணவனை பிரிந்து வாழும் இவர் தனது மகள் பல ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுமி தனது ஆண் நண்பர்களின் உதவியால் தாயை கொலை செய்ய திட்டமிட்டார்.

சம்பவத்தன்று மூன்று ஆண் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்த 17 வயது சிறுமி தாயை கட்டி போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீஸார் விசாரணை செய்தனர் .

விசாரணையில் 17 வயது சிறுமி காவல்துறையினரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனை அடுத்து அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது ஆண் நண்பர்களின் உதவியால் தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சிறுமியிடம் மேலும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவருடைய மூன்று ஆண் நண்பர்களைத் தேடும் பணியில் போலீசார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெற்ற தாயை 17 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version