இந்தியா
14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.
ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு செய்து வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இப்போது 14 மாதங்களுக்கு பிறகு ரெப்பொ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சஞ்சய் மல்கோத்ரா ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் வட்டி உயர்வு இதுதான். குறுகிய கால கடன்களுக்கான வட்டி கால் சதவீதம் (0.25) உயர்த்தப்பட்டு 5.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் வீட்டுக்கடன், வாகனங்களுக்கான கடன், தனிநபர் கடன் ஆகியவற்றின் வட்டி விகிதங்களில் மாற்றம் வருகிறது.







