உலகம்

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 4.72 லட்சம் பேர் பாதிப்பு!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 4.72 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளதை அடுத்து உலக அளவில் 4,72,395 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,77,47,632 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,957,792 என்றும், அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 562,488 என்றும், குணமானோர் எண்ணிக்கை 23,409,108 என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,534,688 எனவும், பிரேசிலில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 312,299 எனவும், குணமானோர் எண்ணிக்கை 10,912,941 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவில் கொரோனாவிற்கு நேற்று ஒரே நாளில் 68,206 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடு முழுவதும் 1,20,39,210 பேருக்கு மொத்தம் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,13,53,727 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்றும், 295 பேர் ஒரே நாளில் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் என்றும், நாடு முழுவதும் 161,881 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இதுவரை மரணமடைந்துள்ளனர். என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version