Connect with us

ஆரோக்கியம்

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

Published

on

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

“என் மகள் ஏன் இப்படியாகிவிட்டாள் டாக்டர்?”, “சின்ன விஷயத்திற்குக்கூட கோபப்படுகிறாள்…” “எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுகிறாள்…”

“எங்களைவிட நண்பர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாள்…”

“முன்பு இப்படியெல்லாம் இல்லை…”

12 – 13 வயதிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் பலரின் கவலை இது. நீங்கள் இவ்வாறு எண்ணியிருக்கலாம். அனுபவித்து கொண்டிருக்கலாம்.

ஆனால், இந்த வயதில் உங்கள் மகளிடம் நீங்கள் காணும் ஒவ்வொரு மாற்றமும் அவளுடைய குணம் கெட்டுவிட்டதற்கான அறிகுறி அல்ல என்பதை முதலில் விளங்கி கொள்ளுங்கள். அவளுடைய மூளையும், உடலும், உணர்வுகளும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

12 வயதில் அவளுடைய மூளையில் என்ன நடக்கிறது?

குழந்தைப் பருவத்திலிருந்து கட்டிளம் வயதிற்குள் செல்லும் காலத்தில் மனித மூளை மிகப்பெரிய அளவில் மறுசீரமைக்கப்படுகிறது. மூளையில் தேவையற்றதாகவோ அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கருதப்படும் சில நரம்பியல் இணைப்புகள் படிப்படியாகக் குறைக்கப்படுகின்றன. இதனை “Synaptic pruning” என்று அழைக்கிறோம். அதே நேரத்தில், திட்டமிடுதல், முடிவெடுத்தல், impulse control, நீண்டகால விளைவுகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் prefrontal cortex இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது. இது தான் பிரச்சினையின் ஆரம்பம். இருந்தாலும், உணர்ச்சிகள், உடனடி எதிர்வினைகள் மற்றும் சமூக அனுபவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மூளையின் பகுதிகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் செயல்பாட்டுடன் இருக்கும்.

இதனுடன் அவள் பெரிய பிள்ளை ஆகும் puberty-யில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் சேர்கின்றன. இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி விடுகிறது. அதனால்… ஒரு சிறிய விஷயம் அவளுக்கு மிகப் பெரியதாகத் தோன்றலாம். நாம் சாதாரணமாகச் சொன்ன ஒரு வார்த்தை கூட அவளுக்கு விமர்சனமாகத் தோன்றலாம். நண்பர் சொன்ன ஒரு கருத்து, பெற்றோர் சொல்வதைவிட அதிக முக்கியத்துவம் பெறலாம். சில நேரங்களில் அவளுக்கே ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று புரியாமல் இருக்கலாம்.

இது அவள் உங்களை விரும்பவில்லை என்பதல்ல. இது அவள் மாறிவிட்டாள் என்பதும் அல்ல. அவள் தன்னுடைய புதிய உணர்வுகளையும், புதிய சுதந்திரத்தையும், புதிய அடையாளத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறாள்.

“ அவள் எங்களை எதிர்த்து பேசுகிறாள்” என்பதற்குப் பின்னால் என்ன இருக்கலாம்? ஒரு பெரும் போராட்டம் இருக்கிறது. கதவை சத்தமாக மூடுவது…

“எனக்கு எல்லாம் தெரியும்!” என்று சொல்வது…“என்னை தனியாக விடுங்கள்!” என்று கூறுவது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவது… தனது privacy-க்கு முக்கியத்துவம் கொடுப்பது…

இவற்றை எல்லாம் உடனடியாக “அவள் என்னை மதிக்கவில்லை” என்று நாம் எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நாளும் வீடே ஒரு போராட்டமாக மாறிவிடும்.

ஆகவே கொஞ்சம் மாற்றி யோசித்தால் ஆனால் அதே நடத்தையை,“என் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய மூளை இன்னும் self-regulation-ஐ கற்றுக்கொண்டிருக்கிறது.” என்று பொசிட்டிவாக பார்க்க ஆரம்பித்தால் நம்முடைய பதில் மாறிவிடும். தம்முடைய கோபம் குறைந்து விடும்.

அப்போது மட்டுமே அவளை தண்டிப்பதற்குப் பதிலாக வழிகாட்ட முடியும். பதிலுக்கு நாமும் கத்துவதற்குப் பதிலாக கேட்க முடியும். அவளை விட்டும் தூரமாகச் செல்வதற்குப் பதிலாக அவளுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக வீடு இருக்க முடியும்.

இந்த வளர் இளம் காலத்தில் Control-ஐ விட Connection முக்கியம். அதற்காக பின்வரும் வழியில் முயற்சிக்கலாம்.

  1. நடத்தையையும் குழந்தையையும் பிரித்துப் பாருங்கள். “நீ ஒரு மோசமான பெண்” என்று சொல்லாமல், “நீ செய்த இந்த நடத்தை சரியில்லை” என்று சொல்லுங்கள். இது குழந்தையின் நடத்தையைத் திருத்த உதவும். மாறாக குழந்தையின் தன்மையையே குறை கூறுவது இன்னும் பிரச்சினையை அதிகரிக்கும்.
  2. ஒவ்வொரு விஷயத்தையும் விவாதமாக மாற்றாதீர்கள்.

இந்த வயதில் குழந்தைகள் தங்களுடைய சுதந்திரத்தை சோதிக்கத் தொடங்குவார்கள். எல்லா விதிகளுக்கும் நீண்ட விளக்கம் கொடுத்து, ஒவ்வொரு முறையும் விவாதத்தில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில்,

“இந்த வீட்டில் இந்த சமூகத்தில் இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கிறது. உனக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதை நாம் பின்பற்ற வேண்டும்.”என்று அமைதியாகச் சொல்வதே போதுமானது.

  1. அவள் கோபமாக இருக்கும்போது நீங்கள் கோபத்துடன் பதிலளிக்காதீர்கள். அவள் குரலை உயர்த்தும்போது நாமும் குரலை உயர்த்தினால், பிரச்சினை இன்னும் பெரிதாகும். அவளுடைய நரம்பு மண்டலம் nervous system இன்னும் self-regulation-ஐ கற்றுக்கொண்டிருக்கிறது. அதனால் இந்த நேரத்தில் அவளுக்கு தேவையானது இன்னொரு கோபமான nervous system அல்ல. எதையும் Cool ஆக அமைதியாக ஹென்டல் பண்ணும் ஒரு calm nervous system. அது பெற்றோரிடமிருந்து வர வேண்டும்.
  2. நேருக்கு நேர் விசாரணை செய்வதைத் தவிர்க்கவும்.“கிளாஸில் என்ன நடந்தது?” “ஏன் இப்படிச் செய்தாய்?”“யார் சொன்னது?”

என்று தொடர்ந்து கேட்பதற்குப் பதிலாக…

வாகனத்தில் பயணம் செய்யும்போது…

சமையல் செய்யும்போது…

நடந்து செல்லும்போது…

ஒன்றாக உணவு அருந்தும் போது

அவளுடன் சாதாரணமாகப் பேசிப் பாருங்கள். எல்லாம் வெளியே வரும்.

எதிர் எதிரே உட்கார்ந்து விசாரணை கமிஷன் போல இல்லாமல் அருகருகே உட்கார்ந்து பேசிப் பாருங்கள். குழந்தைகள் பெற்றோரின் கண்களை நேராகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பேசுவதைக் காட்டிலும், அருகருகே அமர்ந்து பேசும்போது தங்கள் உணர்வுகளை எளிதாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

உங்கள் மகள் ஒரு பிரச்சினையை உங்களிடம் சொல்லும்போது உடனடியாக தீர்வு சொல்ல வேண்டிய அவசியமில்லை. கருத்து கந்தசாமி ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவளை சொல்லவிடுங்கள். காது கொடுத்து கேளுங்கள்.“அது உனக்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கிறது போல…” “நீ ஏன் அப்படி உணர்ந்தாய் என்று எனக்குப் புரிகிறது…” என்று முதலில் அவளுடைய உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள். இங்கே

Validation என்பது அந்த நடத்தையை ஏற்றுக்கொள்வது அல்ல. அவளுடைய உணர்வை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை அவளுக்குத் தெரிவிப்பது. அதற்குப் பிறகு தான் தீர்வைப் பற்றி பேசுங்கள். முதலில் Validate… பிறகு Advise. இது தான் பொர்மூலா.

உணர்வுக்கும் செயலுக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி இருக்கிறது என்பதை அவளுக்கு சொல்லி கொடுங்கள். “எனக்கு கோபம் வந்தது, அதனால் நான் கதவை அடித்தேன்.” என்று அவள் நினைப்பதை,

“எனக்கு கோபம் வந்தது. அந்த கோபத்தை நான் உணர்கிறேன். ஆனால் அதற்கு எப்படி பதிலளிப்பது என்பதை நானே தேர்வு செய்யலாம். ” என்று மெதுவாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதுதான் emotional regulation. இதுதான் அவள் வளர வளர கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் ஒன்று.

அவளுடைய “Mood Buster” பட்டியலை அவளுடனேயே உருவாக்குங்கள்

கோபம் வந்தால் என்ன செய்வது?

சோகமாக இருந்தால்?

Overwhelmed ஆக இருந்தால்?

அவளுக்கே உதவும் விஷயங்களை ஒன்றாகச் சிந்தியுங்கள்.

பிடித்த பாடல் கேட்பது

சிறிது நேரம் வெளியே நடப்பது

புத்தகம் படிப்பது

அமைதியாக சில நிமிடங்கள் இருப்பது. தியானிப்பது திக்ர் செய்வது.

வரைதல்

நம்பிக்கையான ஒருவரிடம் பேசுதல்

வெளியில் சிறிது நேரம் இருப்பது

பிடித்த உணவை சமைப்பது என்று

அவளுக்கு வேலை செய்யும் வழிகளை அவளுடனேயே கண்டுபிடியுங்கள்.

இவை எல்லாவற்றையும் விட இந்த வயதில் போதுமான தூக்கம் மிகவும் அவசியமானது. தூக்கக் குறைவு mood, attention, learning மற்றும் emotional regulation ஆகியவற்றை பாதிக்கக்கூடும்.

அதனால் இரவு நேர screen use-க்கு தெளிவான எல்லைகள் போடுங்கள்.

“Phone வேண்டாம்” என்று மட்டும் சொல்வதற்குப் பதிலாக, “உன் மூளைக்கும் உடலுக்கும் இப்போது ஓய்வு தேவை. அதற்காகத்தான் இந்த நேரத்தில் phone தூர வைக்கிறோம்.” என்று விளக்குங்கள்.

ஆனால் ஒரு முக்கியமான விஷயம்…

12 வயதில் mood swings, அதிக privacy தேவைப்படுதல், நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், பெற்றோரின் கருத்துகளை சில நேரங்களில் எதிர்ப்பது போன்றவை வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் “வயது காரணம்” என்று புறக்கணிக்கக் கூடாது. அவளுடைய ஒவ்வொரு கோபத்திற்கும் பின்னால் ஒரு பிரச்சினை இருக்க வேண்டியதில்லை.

ஆனால் அவளுடைய நீடித்த மாற்றங்களை கவனிக்காமல் விடவும் கூடாது. தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக சோகம், கடுமையான irritability, சமூகத் தொடர்பிலிருந்து விலகுதல், பாடசாலையில் அல்லது வீட்டில் இயல்பான செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு, தூக்கம் அல்லது உணவில் பெரிய மாற்றம் போன்றவை இருந்தால், குழந்தை நல மருத்துவர், பாடசாலையில் உள்ள counsellor அல்லது பொருத்தமான mental-health professional ஒருவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

ஒரு 12 வயது பெண் குழந்தை,

ஒரு முழுமையான குழந்தையும் அல்ல…

இன்னும் முழுமையான பெரியவளும் அல்ல…அவள் இரண்டிற்கும் நடுவில் நிற்கிறாள்.அவளுக்கு சுதந்திரம் வேண்டும். அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும். தனக்கென ஒரு உலகம் வேண்டும்.அதே நேரத்தில் “என்னை யாராவது புரிந்துகொள்கிறார்களா?” என்ற கேள்வியும் அவளுக்குள் இருக்கலாம்.

அதனால், அவள் உங்களைத் தள்ளிவிடும் சில நேரங்களிலும்…

நீங்கள் அவளுக்கான பாதுகாப்பான இடமாகவே இருங்கள். அவளுடைய எல்லைகளை மதியுங்கள். அவள் சாடாரென்று கதவை மூடுகிறாள் என்பதற்காக உங்கள் அன்பின் கதவை மூடாதீர்கள்.

அவளுடைய நடத்தையைத் திருத்துங்கள். ஆனால் அவளுடைய மனதை உடைக்காதீர்கள்.

அவள் உங்களிடம் பேசாமல் இருக்கும் நேரங்களிலும்…“நீ எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம். நான் உன்னுடன் இருக்கிறேன்.” என்று அவளுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஏனெனில் இந்த வயதில் குழந்தைக்கு தேவையானது ஒரு perfect parent அல்ல. ஒரு stable, patient and emotionally available parent. இன்று நீங்கள் காட்டும் அந்த பொறுமை…

நாளை அவள் தன்னுடைய உணர்வுகளைத் தானே கையாளக் கற்றுக்கொள்ளும் அடித்தளமாக மாறலாம்.

12 வயது என்பது “என் குழந்தை என்னை விட்டு விலகுகிறாள்” என்ற வயது அல்ல.

“என் குழந்தை தன்னுடைய புதிய உலகத்திற்குள் நுழைகிறாள்; நான் அவளுடன் எப்படி நடந்து செல்ல வேண்டும்?” என்று பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டிய வயது.

 

 

 

 

 

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
amapolisa aseromania. We are a dynamic platform that champions the art of sharing thoughts, expertise, and stories with a vast audience.