இந்தியா

100வது மன் கி பாத்: பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்திய 100 வயது மூதாட்டி!

Published

on

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

100வது மன் கி பாத் நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்றே ஏப்ரல் 30 ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதனை வெற்றியடையச் செய்யும் எண்ணத்தில், பா.ஜ.க. முழு அளவில் தயாரானது. இந்நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஒலிபரப்புவதற்கு பா.ஜ.க. பல ஏற்பாடுகளை செய்தது.

இந்தியில் பிரதமர் ஆற்றிய உரையானது, 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதிலும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

வாழ்த்திய 100 வயது மூதாட்டி

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை இந்திய வம்சாவளி மக்கள் ஒன்றாக திரண்டு கேட்டனர். அவர்களில் ராம்பென் என்ற 100 வயது மூதாட்டியும் ஒருவர். அவர் இந்தியர்களுடன் சேர்ந்தே முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார். மன் கி பாத் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனரில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் இடம் பெற்று இருந்தது. அதனை பார்த்து அந்த மைதாட்டி, கையால் தொட்டு பிரதமர் மோடியை வாழ்த்தினார். பிறகு, கையெடுத்து கும்பிட்டார். இதன்பின்னர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ஏற்கனவே,மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் உலக கோடீசுவரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version