இந்தியா

பிரதமர் மோடிக்கு A,B,C,D கூட தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி

Published

on

பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசிடி கூட தெரியாது என பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக இருந்துகொண்டே பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சுப்ரமணியசாமி. பாஜக மற்றும் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் அவர் பிரதமரை விமர்சனம் செய்யும்போது மட்டுமே தலைப்புச் செய்திகளில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியசாமியை பின்தொடரும் ட்விட்டர் நபர் ஒருவர் பொருளாதார மந்த நிலை குறித்து 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியசாமி எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

PM Modi interviewஅந்த கடிதத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் முதன்மை கடன் விகிதத்தை 85 சதவீதமாக வேண்டும் என்றும் இறுதியாக 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி குறிப்பிட்டதை பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சுப்பிரமணிசாமி நான் பிரதமர் மோடியை பொருளாதாரம் குறித்து சந்தித்து ஏன் பேசவில்லை என பலர் கேள்வி எழுப்புகின்றனர். அவருக்கு பொருளாதாரம் குறித்து ஏபிசிடி கூட தெரியாது. ஆரம்பத்தில் சில நாட்கள் சந்தித்தேன், அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. தற்போது பொதுமக்களுக்கு தான் பொருளாதாரம் குறித்து தெரிவித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.

Trending

Exit mobile version