இந்தியா

டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 18.12.2025

Published

on

  1. 100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.
  2. ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது.
  3. எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் முடிந்து விட்ட படியால் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படக்கூடும்.
  4. வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவோர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியரக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
  5. ஜனவரி மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி கூறினார்
  6. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்களின் கண்காட்சியை சென்னையில் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.
  7. தவெகவில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் சேர்ந்தார் நடிகர் தாடி பாலாஜி
  8. அரியலூர் ஜெயங்கொண்டம் இலைபுர் கைலாசநாதர் கோயிலின் பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் களவு போனது.
  9. நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் பல வண்ண மலர்களால் அலங்காரம். நாளை ஒரு லட்சம் வடைகளால் ஆன மாலை செலுத்தி வழிபாடு நடைபெறுகிறது.
  10. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆஸ்கார் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை.

Trending

Exit mobile version