இந்தியா
டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 17.12.2025
- திமுகவின் 2026ம் ஆண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
- திருச்சூரில் பிரம்மாண்ட பூரம் திருவிழா – அலங்கரிக்கப்பட்ட 21 யானைகள் அணிவகுத்து நின்றன.
- வரும் ஜனவரி முதல் ,ர்ட்;இட் புந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ இரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 4வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மாலை லக்னோவில் இந்திய அணிக்கும் தென்ஆப்பிரிக்க அணிக்கும் நடைபெறுகிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலையில் உள்ளது.
- பீகார் தேர்தலலின் போது மகளிருக்கு ரூ.10000 வங்கி கணக்கிற்கு அனுப்பியபோது 14 ஆண்களுக்கும் தவறுதலாக ரூ.10000 சென்று விட்டதால் அதனை திருப்பி அளிக்கக் கோரி வங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- 32 வயது ஜப்பானிய பெண் ஒருவர் சாட்ஜிபிடி அறிவுறுத்தலின் பேரில் ஏஐ கதாபாத்திரத்தை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட விசித்திரம் நிகழ்ந்திருக்கிறது.“
- மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் இறந்தது தொடர்பான வழக்கில் இந்திரா ஏஜன்சீஸ் என்ற நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறைக்கு இதுகுறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
- அன்புமணி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தலைமையிலான அணி இன்று தீர்மானம்.
- வேலூர் பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
- திண்டுக்கல்லிலிருந்து சபரிமலைக்கு நேரடி ரயில்தடம் அமைக்க பரிசீலிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
- ஆஸ்கார் விருதுக்கான இறுதிச்சுற்று பரிசீலனையில் இந்தி திரைப்படமான “HOMEBOUND” இடம் பெற்றுள்ளது.
- 2026 ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு எருதுவிடும் திருவிழா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ப்பட்டுள்ளது.