இந்தியா

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிசம்பர் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை அறிமுகம்

Published

on

போக்குவரத்துத் துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2026 முதல் ஜீன் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 42 மைங்களில் வரும் டிசம்பர் 21 ம் தேதி முதல் 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இந்த சலுகைகளை புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை வயது சான்று(ஆதார் அட்டை ஓட்டுறர் உரிமம் கல்வி சான்றிதழ் வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்று ) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

Trending

Exit mobile version