Connect with us

இந்தியா

வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?

Published

on

இன்று காலை மளிகை கடை அண்ணாச்சி என் வீட்டுக்கு சில மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்துவிட்டு என்னிடம் புலம்பினார்.

“நம்ம மக்கள் ஏன் ஸார் இப்படி இருக்காங்க?”

” எப்படி?”

” வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?

நாளுக்கு நாள் இட்லி மாவு பாக்கெட்டுகளுக்கு ரொம்ப கிராக்கியாயிருக்கு? போன மாசம் வரைக்கும் 100 kg பாக்கெட் வித்தேன். இந்த மாசம் 200 kg தாண்டிடுச்சு. ஆஃபீஸிலிருந்து வீடு திரும்பற எல்லா ஆண்களும் தினசரி மாவு பாக்கெட் வாங்காமே, வீட்டுக்குப் போறதேயில்லை. என்னோட கடையில் மட்டுமே தினமும் 200 kg. மத்த கடைகள்ல விக்கிற மாவையும் சேர்த்து கணக்கு போட்டா மயக்கமே வந்துரும் போலிருக்கு. மாவு உடனடியா புளிக்க வைக்க செயற்கை ஈஸ்ட், மிருதுவாயிருக்க சோடா உப்பு, மாவு வெள்ளை வெளேர்ன்னு இருக்கிறதுக்காக சுண்ணாம்பு தண்ணி கலக்கறாங்க ஸார். ஆனா சப்ளை பண்றவங்க கிட்ட கேட்டா மத்த பிராண்ட் அப்படி பண்றாங்க.நாங்க அப்படியில்லை ன்னு சொல்றாங்க.யாரை நம்பறதுன்னு தெரியலை.”

” இதெல்லாம் தெரிஞ்சும் நீங்க ஏன் விக்கறீங்க?”

” எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல ஸார்.ஆனா நான் மாவு இல்லேன்னு சொன்னா கஸ்டமர்கள் வேற கடைகளுக்கு போய் மாவு வாங்கிட்டு அதே கடையில் மத்த மளிகை சாமான்களையும் வாங்கிட்டு போயிடறாங்க.இதனால நம்ம வியாபாரம் பாதிக்குது. அதான் மனசை கல்லாக்கிட்டு விக்கறேன். என்னதான் வேலை பளு இருந்தாலும் நம்ம வீட்டு லேடீஸ் கொஞ்சம் சிரமம் பாக்காமே அரிசியையும், உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊறவெச்சு க்ரைண்டர்ல போட்டு மாவாக்கிகிட்டா இந்த கெமிக்கல்ஸ் மாவுக்கு குட்பை சொல்லிட்டு ஆரோக்கியமான இட்லி தோசை சாப்பிடலாமே ஸார்? ஏன் இந்தப் பெண்கள் இப்படி இருக்காங்க. வயித்துல ஏதாவது பிரச்சினை வந்துட்டா வாழற வாழ்க்கை நரகமாயிடும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் வேற எந்த விஷயமும் பெரிசில்லை.

இன்னிக்கு நூத்துக்கு எழுபது சதவீத வீடுகளில் க்ரைண்டர்கள்

வேண்டாத ஒரு பொருளா மாறிடுச்சு.

இந்த இட்லி மாவுதான் கொடுமைன்னா Half cooked சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் ன்னு மக்களின் ஆரோக்கியத்தை பதம் பார்க்ககிற ரசாயனங்கள் கலந்த அரை வேக்காட்டு உணவுகளுக்கும் கிராக்கி ஸார் ”

என்று புலம்பி விட்டு போனார்.

………………………

நம் குடல் பகுதி ( Gut ) என்பது

நம்முடைய உடம்பின் ‘ இரண்டாவது மூளை’ என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.அண்ணாச்சியின் புலம்பலில் நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

நட்புகளே?

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 மணி நேரங்கள் ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 05.03.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 05.03.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

செய்திகள்21 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவி – தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் 2026: 5 ஏக்கர் நிலம் + ரூ.5 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மார்ச் மாதம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

சினிமா21 மணி நேரங்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

வணிகம்21 மணி நேரங்கள் ago

HDFC வங்கி ஏடிஎம் விதிகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமல்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய ராஜயோகம் 2026: சூரியன்–சுக்கிரன் சேர்க்கையால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்4 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்4 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

கிரிக்கெட்4 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

2026 சிம்ம ராசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணவரவில் பெரிய முன்னேற்றம்!

Translate »
Sextoys for couples archives lily phillips. Cva scout v2 takedown stainless single shot rifle 44 magnum. Short term rental coffee machine.