உலகம்
விமானிகளின் அறைக்குள் திடீர் என்று புகுந்த பயணி.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு

மிலான்: ஏர் இந்தியா விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானிகளின் அறைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை, இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் இருந்து டெல்லி நோக்கி கிளம்பி இருக்கிறது. ஆனால் கிளம்பிய அரை மணி நேரத்தில் மீண்டும் மிலான் நகரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானிகளின் அறைக்குள் திடீர் என்று புகுந்த பயணி.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வேகமாக சென்று விமானிகள் அறையில் நுழைய பார்த்துள்ளார். இதனால் அவசர கால நடவடிக்கை எடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது.
தற்போது அவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர் தீவிரவாதியா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. ஏன் விமானிகள் அறைக்குள் சென்றார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.

















