இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.01.2026

- அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பணிமுடிந்த 11 ரயில் நிலையங்களை ஜனவரி 22ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.இதில் தமிழ்நாட்டில் 8 ரயில் நிலையங்களும் கேரளத்தில் 3 ரயில் நிலையங்களும் உள்ளன.
- கருக்கலைப்பு, பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, தற்கொலை போன்ற தலைப்புகளிலும் இனி வீடியோ வெளியிட்டு முழு வருவாய் ஈட்டலாம் என யுடியுப் நிறுவனம் அறிவிப்பு. இந்த தளர்வு கல்வி சார்ந்த தகவல்கள் ஆவணப்படங்கள் செய்திகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பொருந்தும். ஆனால் முகம் சுளிக்கும் வகையிலோ கொடூரமான காட்சிகளுடனோ இருந்தால் வருவாய் மறுக்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- கோவை மதுரை மெட்ரோ ரயில் நிராகரிப்பை தொடர்ந்து ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கும் ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு.
- நெதன்யாகுவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இல்லையெனில் 2027க்குள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகி விடுவோம் என சீனா எச்சரிக்கை
- பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து மக்கள் பெருமளவல் திரும்பி வருவதால் சென்னை மாநகர எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல். பஸ் ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.













