இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

- கைரேகை விழாத அணைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடைசி நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் – அரசு அறிவிப்பு
- தவெக தலைவர் விஜயிடம் 7மணி நேரம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்தது. நாளையும் விசாரிக்கப்படுவார். தேவைப்பட்டால் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு சம்மன் அனுப்பி மீண்டும் விசாரிக்கப்படுவார்.
- ஈரான் இணைய சேவை நிறுத்தம் துவங்கிய சிலமணி நேரங்களில் எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க்கை ஈரான் மீது ஆக்டிவேட் செய்துவிட்டதாக அறிவித்தார். ராணுவ ஜாமர்களைக் கொண்டு மீண்டும் இணைய சேவையை முடக்கியது ஈரான் அரசு.
- இந்தி உங்களுடைய தாய்மொழி அல்ல. என்பதை உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மக்கள் உணர வேண்டும். எந்த மொழியையும் நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு மொழியை திணிக்க நினைத்தால் திருப்பி அடிப்போம். – மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.
- மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபரான்க்ஸ், பெலீனோ உள்ளிட்ட பல்வேறு மாடல் கார்களுக்கு ரூ.25000 முதல் ரூ.1.30 லட்சம் வரை சலுகைகளை அறிவித்தது மாருதி நிர்வாகம்.
- ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலையில் பிப்ரவரி 9ம் தேதி முதல் தயாரிப்பைத் தொடங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்.
- காணும் பொங்கலன்று மெரீனா கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அடையாள அட்டை பெற்றுக் கொண்டு செல்ல வேண்டியது கட்டாயம். – சென்னை மாநகர காவல்துறை
- மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு போனில் ஆறுதலாக பேசவும் புலம்பலை கேட்கவும் பணம் வசூலிப்பதை ஒரு சேவை போல் செய்வது டிரெண்டாகி வருகிறது. இந்த இன்ஸ்டண்ட் ரிப்ளை ப்ரொவைடர்கள் இதன்மூலம் மாதத்திற்கு ரூ.129000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். பலர் தனிமையில் இருப்பதால் தங்களிடம் கவலைகளை கொட்டித் தீர்க்க இவ்வாறு செய்வதாக தெரிவித்துள்ளனர்.













