இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.01.2026

- கமேனியிடமிருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவ தயார் – டிரம்ப்.
- ஈரானை அமெரிக்கா தாக்கினால் பதிலுக்கு தாக்குவோம். அமெரிக்க கப்பல்கள் குறிவைக்கப்படும். – ஈரான் எச்சரிக்கை
- இலங்கை அதிபர் அனுரகுமாரவின் புதிய ஆட்சிக் கொள்கை தொடர்பில் தமிழர்கள் உரிமை இழக்கக் கூடிய சூழல் நிலவுவதால் மீண்டும் பதட்டம் உருவாவதைத் தடுத்து தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்.
- மராட்டிய மாநில விவசாயிகளிடம் சிறுநீரகங்களை அபகரித்து முறைகேட்டில் ஈடுபட்ட திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனைக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலை பாதுகாக்க போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் டயர் டியுப் எரிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
- திருமண உறவில் இருக்கும்போது மனைவி யாரால் கர்ப்பமானாலும் அந்தக் குழந்தைக்கு சட்டப்படி கணவன்தான் தந்தை எனக் கருதப்படுவார். குழந்தையின் முழுப்பொறுப்பையும் கணவர்தான் ஏற்க வேண்டும். – உச்சநீதிமன்றம்.













