இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

- ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கோரும் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிஜறார் நீதியரசர் பி.டி.ஆஷா.
- 49வது சென்னை புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
- உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை நாளை திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாடியநல்லூரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
- ரஷ்ய கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை வட அட்லாண்டிக் கடலில் வர்த்தக தடைகளை மீறியதாக சிறைபிடித்தது அமெரிக்கா.
- இந்தியா தலைமையிலான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உட;பட 56 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.
- மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி. – சென்னை உயர்நீதிமன்றம்.
- மெடிக்கல் ரெக்கார்டுகளை பதிவேற்றி உடல் நலம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் Chat GPT Health என்ற பிரத்யேக Tabஐ அறிமகம் செய்தது Open AI.













