இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.01.2026

- இன்று காலை சற்று உயர்ந்த தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.70 குறைந்து கிராம் ரூ.12800க்கும் சவரன் ரூ.102400க்கும் விற்பனை ஆகிறது.
- அதேபோல் இன்று காலை சற்று உயர்ந்த வெள்ளி விலை மாலையில் கிராமுக்கு ரூ.6 குறைந்து கிராம் ரூ.277க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.277000க்கும் விற்பனை ஆகிறது.
- ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்ப வழங்கப்படும். – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இதனால் அன்று படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
- ஜனநாயகனுக்கு 650 திரையரங்குகள் பராசக்திக்கு 450 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
- ஜனவரி 28ம் தேதி ராகுல்காந்தி தமிழ்நாடு வருகிறார்.
- பொங்கல் பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்கும் திட்டத்தை 8ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
- 1965ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பொது தமிழ்நாடு காவல்துறையும் இந்திய ராணுவமும் சேர்ந்து ஆயிரக்கணக்கான போராட்டக் காரர்களை சுட்டுக் கொன்றதை அடிப்படைஙாக வைத்தே பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். படத்தில் வரும் ” டெல்லிதான் இந்தியாவா? ” என்ற வசனம் பராசக்தி ரசிகர்களை பரவசமடையச் செய்திருக்கிறது.












