இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.01.2026

- செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கினால் 3 சதவீதம் கட்டண சலுகை ஜனவரி 14 முதல் ஜீலை 14 வரை வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவிக்கை
- வெனிசுலாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவே வெளியேறு என முழக்கமிட்டு பேரணியாக சென்றனர்
- இரவு 10 மணிக்கு மேல் ரயில் பயணத்தில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கவும் சத்தமாக தொலைபேசியில் பேசினாலோ ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். – ரயில்வே துறை எச்சரிக்கை
- வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 9, 10, 11 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஜனவரி 12ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன்.
- பொங்கலன்று இஸ்ரோ தேர்வு – தேர்வு நாளை மாற்ற வேண்டும். – சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை.
- ஆண்டுதோறும் ஓய்வுதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக ரூ.11000 கோடி வழங்கிட தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.













