இந்தியா
மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு ஆலயங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமபந்தி பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
- தமிழில் உருவாக்கப்பட்டுள்ள “சூப்பர் இன்டெலிஜென்ட்“ எனும் ஏஐ தொழில்நுட்பம் சென்னையில் ஜி.ஆர்.டி. ஓட்டலில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் போனோமிக் இன்டெலிஜென்ஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பாஸ்கரன் பின்னை விளக்க உள்ளார்.
- ஏப்ரல் 24ல் வெளியாக உள்ள “MICHAEL’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இது உலகப்புகழ்பெற்ற இசை ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சனின் வரலாற்றுப்படம்.
- மணிப்புர் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த்சிங் பதவியேற்க உள்ளார்.டெல்லியில் நடைபெற்ற மணிப்புர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு.
- வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான வரிச்சலுகை இனி எடையின் அடிப்படையில் வழங்கப்படும். – ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டிவ் வசிக்கும் பெண்கள் 40 கிராம் வரையும் மற்றவர்கள் 20 கிராம் வரையும் வரி இன்றி கொண்டு வரலாம். – நிர்மலா சீதாராமன்













