Connect with us

இந்தியா

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

Published

on

தமிழ்நாட்டின் 17 வது சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நான்கு முனை போட்டியாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணி முடிக்கப்பட்டன. எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

திமுக கூட்டணி               –           74 இடங்கள்

அதிமுக கூட்டணி          –           53 இடங்கள்

தவெக அணி                    –           107 இடங்கள்

இந்நிலையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுவதால் பல்வேறு விதமான குதிரை பேரங்கள் நடைபெற்று வருகின்றன.

எது எப்படியிருந்தாலும் தவெக தலைவர் விஜய்தான் அடுத்த முதல்வர் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய் பனையூர் பங்களாவிலிருந்து தலைமைச் செயலகம் வந்து செல்ல ஹெலிபேட் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விஜய் பனையூரிலிருந்து தலைமைச் செயலகம் வரை காரில் வந்து செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்பதாலும் இதனால் முதலமைச்சர் வாகனங்களுக்கு வழி ஏற்பாடு செய்யும்போது பொதுமக்களுக்கு தேவையற்ற இடைஞ்சல் ஏற்படும் என்பதாலும் அதனால் பொதுமக்களிடையே தேவையற்ற அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் பனையூரிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்ல ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.

நேப்பியர் பாலம் அருகே கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஹெலிபேட் ஒன்று உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயல்லிதா தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்ல அந்த வெறலிபேடைப் பயன்படுத்தி இருக்கிறார். டில்லியிலிருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்றோரும் அதை பயன்படுத்தி வருகின்றனர்.

அது கடலோரக் காவல்படை பயன்பாட்டிலும் கட்டுப்பாட்டிலும் உள்ளதால் தினந்தோறும் அதை பயன்படுத்த உரிய அனுமதி கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

எனவே தலைமைச் செயலகத்திற்கு வெளியே உள்ள வாகன நிறுத்தத்தின் அருகே ஒரு தற்காலிக ஹெலிபெட் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பனையூர் பங்களாவுக்க அருகில் கிழக்கு கடற்கரையை ஒட்டிய இடத்தில் இரண்டு இடங்களில் ஹெலிபேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இதற்கு அரசுப்பணம் செலவிடப்படுமா அல்லது விஜய் தனது சொந்த பணத்தில் செய்து கொள்வாரா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற நாட்டின் உயரிய பதவிகளில் உள்ளவர்களே நாள்தோறும் டில்லி நகருக்குள்ளெ பல்வேறு இடங்களுக்கு சென்று வர அரசு வாகனங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு தமிழ்நாட்டிலும்  தற்போது முதல்வர் வந்து செல்ல ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு வாகனங்கள் இருக்கிறது. அவை என்ன செய்யப்படும்? புதிய ஹெலிகாப்டர் வாங்க மற்றும் ஹெலிபேடுகள் அமைக்க அரசுப்பணம் செலவழிக்கப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இது குறித்து ஒன்றிய அரசின் அனுமதி மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. எல்லா வசதிகளையும் விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வரும் ஒருவர் இப்படி செய்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசிக்காரர்களிடம் கவனம் தேவை! சிக்கலான குணமும் கணிக்க முடியாத நடத்தையும் கொண்டவர்கள் யார்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி பகவானின் சக்திவாய்ந்த சஞ்சாரம்: ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளுக்கு 2027 வரை அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஜூன் 21-ல் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசிகளுக்கு வருமான உயர்வு யோகம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன்–குரு இணைவால் உருவாகும் த்வித்வாதச யோகம்: ஜூலை வரை மேஷம், சிம்மம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி 2026: புதாதித்ய & பத்ரா ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு தொழில், செல்வம், அதிர்ஷ்டத்தில் ஜாக்பாட்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் நட்சத்திர மாற்றம் ஜூலை 2ல் நடைபெறுகிறது! இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

துவித்வாதச யோகம் 2026: சந்திரன் – புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

உச்ச குருவின் அருள், சனியின் சக்திவாய்ந்த பார்வை! இந்த 6 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படப் போகிறதா?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் அருள் அதிகம் கிடைக்கும் 4 ராசிகள்! வாழ்க்கையில் முன்னேற்றமும் செல்வ வளமும் பெறுவார்களா?

இந்தியா7 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்5 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வணிகம்4 நாட்கள் ago

SBI 5 ஆண்டு FD திட்டம்: ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? மூத்த குடிமக்களுக்கு கூடுதல் லாபம்!

Translate »
Lexonads | free ad network | automated website traffic.