Connect with us

இந்தியா

நடிகை சரோஜாதேவி அவர்கள் காலமானார்

Published

on

                                           

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை சரோஜாதேவி அவர்கள் இன்று காலை பெங்களுரூவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயத 87.

அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சரோஜாதேவி 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி கர்நாடகாவில் மைசூரு ராஜ்ஜியத்தில் பைரப்பா மற்றும் ருத்ரம்மா தம்பதிகளுக்கு மகளாக  பிறந்தார். சரோஜா தேவி உண்மைப் பெயர் ராதாதேவி கவுடா. இவர் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வரி என்கிற தனது அக்கா சீதாதேவி அவர்களின் மகளை தத்தெடுத்தும் வளர்த்து வந்தார்.

தனது அவரது 13வது வயதில் ஒரு விழாவில் பாடும்போது பிரபல திரைப்படத்“ தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக விளங்கிய பி.ஆர்.பந்துலு என்கிற கிருஷ்ணமூர்த்தி அவரை நடிக்க அழைத்தார். 1955ல் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார். தமிழில் 1958ல் எம்.ஜி.ஆருடன் நாடோடிமன்னன் என்ற படத்தில் அறிமுகமானார்.  அவர் திரைப்படத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவரின் அனுமதியுடன் நடித்தார்.

அவர் தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆருடன் 26 படங்கள், சிவாஜிகணேசனுடன் 22 படங்கள் ஜெமினி கணேசன்எஸ். எஸ். ராஜேந்திரன்முத்துராமன்ஏ. வி. எம். ராஜன்ரவிச்சந்திரன் ஆகிய பிற நடிகர்களுடன் 15 படங்கள் என தமிழில் மொத்தம் 63 படங்களில் நடித்துள்ளார்.

சரோஜாதேவி திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.

திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன்பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.

ஒரு காலத்தில் ‘சூப்பர் ஸ்டார்’களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.

அவரது 100வது திரைப்படம் பெண் என்றால் பெண் என்ற தமிழ்த் திரைப்படமாக அமைந்தது.

அவர் நடித்துள்ள திரைப்படங்களில் நாடோடிமன்னன், இருவர் உள்ளம், அரசகட்டளை, அன்பேவா, ஆலயமணி, கல்யாணப்பரிசு, எங்க வீட்டுப் பிள்ளை, பாகப்பிரிவினை, பாலும் பழமும், புதிய பறவை போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்கள் உள்ளன.

அவர் பெற்ற விருதுகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • 2008 வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருது
  • 1992 பத்மபூஷன், இந்திய அரசின் தேசிய விருது
  • 1969 பத்மஸ்ரீ இந்திய அரசின் தேசிய விருது
  • 1980 கர்நாடக அரசின் அபினண்டன -காஞ்சனா மாலா விருது
  • 1965 சிறப்பு பெயராக “அபிநய சரஸ்வதி ” – கர்நாடக அரசு

இந்திய திரையுலகம் ஒரு சிறந்த நடிகையை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized22 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

Translate »