Connect with us

இந்தியா

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

Published

on

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

வணிகவரிகள் மற்றம் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையின் சாராம்சம் வருமாறு…

“எங்கிருந்தும் பதிவு செய்யும் முறை“ திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்டு 17 முதல் மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்களின் (கட்டிட நிறுவனங்கள்) முதல் விற்பனை பத்திரங்களை இணைய வழியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக குடும்ப ஏற்பாடு (சொத்து) தொடர்பான 4 முக்கிய ஆவணங்களின் (செட்டில்மென்ட், விடுதலை பத்திரம், பாகப்பிரிவினை, செட்டில்மென்ட் ரத்து) காகிதமற்ற இணைய வழிப் பதிவும் இப்போது கட்டாயமாக்கப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் நிறைவேற்றப்பட்ட ஆவணம், தேவையான ஆதரவு ஆவணங்களுடன் இணையவழி மூலம் சார்பதிவாளருக்கு அனுப்பப்படும்.

பதிவுத்துறை இவற்றை பகுப்பாய்வு செய்து அடையாள சரிபார்ப்பு, அங்கீகாரம் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களின் “லாக்-இன்“ முகவரிக்கு அனுப்பப்பட்டு “ஸ்டார்“ அமைப்பில் பாதுகாத்து வைக்கப்படும். வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்யவும் காகித சார்பினை படிப்படியாக குறைக்கவும் இந்த புதிய முறை வரும் நவம்பர் 2ம் தேதி முதல் “ஸ்டார் 3.0“ திட்டத்தின் கீழ் “எங்கும் பதிவு – இரண்டாம் கட்டம்” காகிதமற்ற பதிவினை செயல்படுத்துவதற்கும் கட்டாயமாக்குவதற்கும் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காகிதமற்ற பதிவு முறையின் நன்மைகள்

  1. சம்பந்தப்பட்ட தரப்பினர்களே ஆவணத்தை உருவாக்க வழிவகுக்கும். இதனால் பதிவு நடைமுறையின்போது ஆவணங்களை நேரடியாக கையாளுவது குறையும்.
  2. பதிவ செய்த பிறகு மீண்டும் மீண்டும் கையாளுதல், நகர்த்துதல், ஸ்கேன் செய்தல் மற்றும் பதிவு ஆவணங்களைப் பாதகாத்தல் ஆகியவை குறையும்.
  3. ஆவணங்களை மிண்ணனு முறையில் பரிசீலிப்பதை எளிமையாக்கும். பதிவு நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை கூடுதலாகும். மற்றும் முத்திரையிடுதல், பக்க எண் இடுதல் மற்றும் ஸ்கேன் செய்தல் ஆகியவற்றை நீக்கும்.
  4. பதிவ செய்த ஆவணங்களை முறையான டிஜிட்டல் முறையில் பாதுகாக்கவும் மீண்டும் பெறவும் வழிவகுக்கும்.
  5. பதிவு நடைமுறையின் பல்வேறு நிலைகளில் காகித பதிவேடுகளை பராமரித்தல் மற்றும் கையாளுதல் தேவை குறையும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா33 minutes ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

வணிகம்23 மணி நேரங்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

தமிழ்நாடு23 மணி நேரங்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 13.11.2026

Uncategorized1 நாள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

Uncategorized4 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

ஆன்மீகம்4 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

சினிமா5 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா3 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

Translate »
Bio pages sell.