தமிழ்நாடு
காவிரியில் வெள்ளம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம்: காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருப்பதால், காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீண்டும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களில் மழை அதிகரித்து உள்ளது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

காவிரியில் வெள்ளம்
நேற்றில் இருந்தே இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஏற்கனவே தமிழகத்தில் பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கடைமடை வரை வந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால், காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தஞ்சை, சேலம் ஆகிய காவேரி கரையோட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
















