Connect with us

இந்தியா

ஏ.ஐ யால் கிடைத்திருக்கும் ஒரு புதிய வேலை வாய்ப்பு – என்ன ஆச்சரியமா இருக்கா?

Published

on

காலங்காலமாக பல்வேறு பணிகள் அவற்றிற்க தகுந்த மனித ஆற்றல்களை கொண்டே செய்யப்பட்டு வந்த நிலை மாறி ஏ.ஐ என்ற புதிய தொழில்நுட்ப வரவால் பல மனிதர்கள் பல நாட்கள் செய்யக்கூடிய வேலைகளை இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருசில நாள்களிலோ அல்லது ஒரு சில மணி நேரங்களிலோ செய்து முடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருவதால் பல்வேறு  நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த பலர் தங்களது வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஏ.ஐ. காரணமாக ஒரு புதிய வேலை வாய்ப்பு உருவாகியிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?, அட ஆமாங்க..  வாங்க பார்ப்போம்…

ஏ.ஐ. வந்தால் வேலை குறையும். நேரம் மிச்சமாகும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த ஏ.ஐ. யால் ஒரு புதிய பிரச்னை உருவாகியுள்ளது. அதனால் பல வேலைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதனை தீர்க்க உருவானதே இந்த புதிய வேலை வாய்ப்பு. இதன் பெயர் “பாட் சிட்டிங்“.

அதாவது ஏ.ஐ மூலம் பெறப்படும் தகவல்கள் அணைத்தும் 100 சதவீதம் சரியானவை அல்ல. அவற்றை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இது ஏனென்றால் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து அதிலிருந்த நாம் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த சற்றேறக்குறைய ஒத்துப் போகக் கூடிய தகவல்களைத்தான் ஏ.ஐ. தொழில்நுட்பம் நமக்கு வழங்கி வருகின்றது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் எல்லா தகவல்களும் சரியானவை என்று இப்போது உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. பல்வேறு தவறான தகவல்களும் பரவிக் கிடக்கின்றன. இதனால் நமக்குக் கிடைக்கக் கூடிய தகவல்களும் பல நேரங்களில் தவறானவையாகவும் அமைந்து விடுகின்றன. இதனை சரி செய்யவே மனிதர்களால் மட்டுமே செய்யப்படக் கூடிய வேலையே இந்த பாட் சிட்டிங்.

ஒரு புதிய ஆய்வின்படி ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 6 மணி நேரம் ஏ.ஐ.யின் தவறுகளை திருத்தவும் பதில்களை சரிபார்க்கவும் மீண்டும் மீண்டும் கேள்விகளை கொடுத்து சரியான பதிலை பெறவும் செலவிடுகின்றனர்.

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  டிஜிட்டல் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 75 சதவீதம் பேர் தங்களின் தனிப்பட்ட உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதாக கூறினாலும் வெறும் 13 சதவீதம் பேர் மட்டுமே நிறுவனத்தின் செயல்திறன் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையே ஆய்வாளர்கள் ஏ.ஐ.புரடெக்டிவிட்டி பாரடாக்ஸ் (Productivity Paradox)  என்று அழைக்கின்றனர்.

இன்று பல அலுவலகங்களில் ஊழியர்கள் தாங்களே வேலை செய்வதற்கு பதிலாக ஏ.ஐ. செய்த வேலையை மேற்பார்வை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல்கள், அறிக்கைகள், பிரசண்டேஷன்கள், குறியீடுகள் என ஏ.ஐ. உருவாக்கும் அணைத்தையும் மனிதர்களே மீண்டும் சரி பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் சில நிபுணர்கள் இதை எதிர்மறையாக பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏ.ஐ யை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை சரியாக வழிநடத்தி அதன் பதில்களை மதிப்பீடு செய்யும் திறனும் முக்கிய வேலைத்திறன்களாக மாறும் என அவர்கள் கருதுகின்றனர்.

மொத்தத்தில் ஏ.ஐ மனிதர்களின் வேலையை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக வேலை செய்வது என்பதிலிருந்து ஏ.ஐ. செய்த வேலையை கண்காணிப்பது என்ற புதிய பொறுப்பை மனிதர்களுக்கு கொடுத்துள்ளது.

இப்போதைக்கு ஒவ்வொரு புத்திசாலி ஏ.ஐ.க்கும் பின்னால் அதன் தவறுகளை சரிசெய்யும் ஒருமனிதர் இருப்பதுதான் உண்மை.

அச்சகங்களில் எடிட்டர் மற்றும் புரூஃப் ரீடர் ஆகியோர் செய்யும் வேலையைப் போன்றதுதான் இந்த பாட் சிட்டிங் என்றால் மிகை ஆகாதுதானே.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

தினபலன்14 minutes ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா13 மணி நேரங்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா2 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்2 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

வணிகம்3 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

வணிகம்3 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா3 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

Translate »
Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. ip cam / cctv 解決方案.