இந்தியா
உப்புக்கு Expiry Date இருக்கா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?.

உணவுகளில் உப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஆனால், உப்புக்கு Expiry Date இருக்கா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?.
சமையலறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் உப்பு. எந்த உணவையும் உப்பு இல்லாமல் சாப்பிட முடியாது. “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது ஒரு தமிழ் பழமொழி. இதற்கு அர்த்தம், உப்பு சேர்க்காத உணவு சுவையற்று, வீணாக குப்பைக்குத் தான் போகும் என்பதாகும். அந்த அளவிற்கு உணவுகளில் உப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
ஆனால், உப்புக்கு Expiry Date இருக்கா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா.
பொதுவாக, உப்பு கெட்டுப்போகாது. அப்புறம் ஏன் Expiry Date என்று கேட்கிறீர்களா? உப்பு, பாக்டீரியா மற்றும் கிருமிகளில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி, அவற்றை வளரவே விடாது. கிருமிகளே வளர முடியாத ஒரு பொருள் எப்படி கெட்டுப்போகும். அதனால், சுத்தமான உப்புக்கு அழிவே கிடையாது.
நாம் சாப்பிடும் தூள் உப்பில், அயோடின் சேர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த அயோடின் காலப்போக்கில் காற்றில் கரைந்து ஆவியாகிவிடும். உப்பு உப்பாக மட்டுமே இருக்கும். ஆனால் சத்து இருக்காது. அதற்கு தான் அந்த Expiry Date கொடுக்கப்படுகிறது.
நாம் சாப்பிடும் தூள் உப்பில், அயோடின் சேர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த அயோடின் காலப்போக்கில் காற்றில் கரைந்து ஆவியாகிவிடும். உப்பு உப்பாக மட்டுமே இருக்கும். ஆனால் சத்து இருக்காது. அதற்கு தான் அந்த Expiry Date கொடுக்கப்படுகிறது.
காற்றில் உள்ள ஈரப்பதத்தால் உப்பு கல் மாதிரி இறுகிப் போகலாம். அதைத் தடுக்க சேர்க்கப்படும் “Anti-caking agents” குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேலை செய்யாது. Expiry Date முடிந்தாலும் உப்பை தாராளமாக பயன்படுத்தலாம். சிறிது அயோடின் சத்து குறைவாக இருக்கும்.













