Connect with us

ஆரோக்கியம்

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

Published

on

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy). கேட்பதற்கே ஏதோ ஹாலிவுட் அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் வசனம் போல இருக்கிறதா? அதுதான் இல்லை.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் உலகத் தலைவர்களும், பெரும் கோடீஸ்வரர்களும் ரகசியமாக கூடிப் பேசும் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – WEF) அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியிடப்பட்ட ஒரு பிரகடனம் இது.
இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
உங்களுக்கென்று சொந்தமாக நிலமோ, வீடோ, வாகனமோ இருக்காது. யாராலும் தொட முடியாத சேமிப்போ, உங்களுக்கென்று ஒரு தொழிலோ இருக்காது. உங்கள் கையில் ரொக்கப் பணம் இருக்காது; வங்கியில் இருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் ஒரு button ஐ அமுக்கி முடக்கிவிட முடியும். மொத்தத்தில், இந்த உலகை இயக்கும் ஒரு “மேல்தட்டு அமைப்பு”உங்களுக்கு என்ன தேவை என்று முடிவு செய்கிறதோ, அதை மட்டும் நீங்கள் பெற்றுக்கொண்டு “மகிழ்ச்சியாக” வாழ வேண்டும்.
இது ஏதோ எதிர்காலத்தைப் பற்றிய வெறும் யூகம் அல்ல.
2030-ஆம் ஆண்டிற்குள், அதாவது இன்னும் சில வருடங்களுக்குள், இதைச் செய்து முடிக்க வேண்டும் என உலகளாவிய நிறுவனங்களால் தீட்டப்பட்ட ஒரு திட்டவட்டமான செயல்திட்டம்.
உலகம் முழுவதும் ஈரான் போர், உக்ரைன் போர், எப்ஸ்டீன் files வேற்றுக்கிரகவாசிகள் (UFOs) பற்றிய செய்திகளிலும், அடுத்தடுத்த உலகளாவிய நெருக்கடிகளிலும் மூழ்கிப் போயிருக்கும் வேளையில், இந்தத் திட்டம் சத்தமில்லாமல், திட்டமிட்டபடி அரங்கேறி வருகிறது. இந்த திட்டத்திற்காக உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மூன்று பெரும் கட்டமைப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
முதலாவது- Digital Identity.
செப்டம்பர் 2024-ல், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அனைத்து உறுப்பு நாடுகளும் “Global Digital Compact” என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டன.
2030-க்குள் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உலகளாவிய டிஜிட்டல் அடையாளத்தை (Universal Digital Identity) உருவாக்குவதே இதன் காலக்கெடு.
இதனால் பாதிப்பு என்ன என நீங்கள் கேட்கலாம்?
நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்காத, உங்களால் பதவியை விட்டு நீக்க முடியாத சில சர்வதேச அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உங்கள் டிஜிட்டல் அடையாளம் சம்மந்தமான dataக்கள் இருக்கும்.உங்களின் கல்வி, மருத்துவம், வங்கிச் கணக்குகள் மற்றும் இணையச் செயல்பாடுகள் என அனைத்தையும் ஒரே டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் இணைக்கும் ஒரு தொழில்நுட்ப முறை இது.
எதிர்காலத்தில் நீங்கள் பயணம் செய்ய வேண்டுமானாலும், வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ அல்லது இணையத்தைப் பயன்படுத்தவோ இந்த டிஜிட்டல் அடையாளத்தின் அனுமதி கட்டாயமாக்கப்படவுள்ளது. இது சேவைகளை எளிமையாகவும் வேகமாகவும் பெற உதவும் என்று கூறப்பட்டாலும், ஒரு தனிமனிதனின் ஒட்டுமொத்த நடமாட்டத்தையும், செயல்பாடுகளையும் அரசாங்கங்களோ அல்லது சர்வதேச அமைப்புகளோ ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கூடிய அபாயத்தையும் இது கொண்டுள்ளது.
இரண்டாவது- Programmable Money அல்லது CBDC.
இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களின் சொந்த மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சிகளை (CBDC) உருவாக்கி வருகின்றன. இது உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் சாதாரண டிஜிட்டல் பணம் போன்றது அல்ல. இன்று உங்கள் கையில் இருக்கும் பணத்தை நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் செலவழிக்கலாம், சேமிக்கலாம். யாரும் அதைத் தடுக்க முடியாது.
ஆனால் Programmable எனப்படும் இந்த டிஜிட்டல் பணத்தை அரசாங்கத்தால் எப்போது வேண்டுமானாலும் முடக்க முடியும். அரசாங்கம் அனுமதிக்கும் பொருட்களுக்கு மட்டுமே நீங்கள் அதைச் செலவிட முடியும் என்ற கட்டுப்பாட்டை விதிக்கலாம்.
அந்தப் பணத்திற்கு ஒரு ‘காலாவதி தேதி’ (Expiry Date) வைக்கப்படலாம்; அதாவது அதற்குள் நீங்கள் அதைச் செலவழிக்காவிட்டால் பணம் காணாமல் போய்விடும்! உங்கள் நடத்தை சரியில்லை என்று கணினி முடிவு செய்தால், உங்கள் கணக்கிலிருந்து பணம் தானாகவே கழிக்கப்படலாம். உங்கள் முழு நிதி சுதந்திரமும் பறிபோகும் அபாயம் இதில் உள்ளது.
மூன்றாவது – மத்திய மயமாக்கப்பட்ட சுகாதார அதிகாரம் (Centralized Health Authority)
மே 2025-ல், உலக சுகாதார அமைப்பு (WHO) தனது பெருந்தொற்று உடன்படிக்கையை (Pandemic Agreement) கைச்சாத்திட்டது.
உலகெங்கிலும் உள்ள 194 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இது எதிர்கால சுகாதார நெருக்கடிகளின் போது உலக நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் சட்டபூர்வமான அதிகாரத்தை WHO-வுக்கு வழங்குகிறது.
கொரோனா காலத்தில் உலகமே எப்படி முடங்கியது என்பதை நாம் பார்த்தோம். கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்து முடக்கப்பட்டது, பள்ளிகள் மூடப்பட்டன. அனைத்தும் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்தன.
இப்போது, அதற்கு ஒரு சட்டபூர்வமான ஒப்பந்த வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படும் போது, உலக சுகாதார அமைப்பின் உத்தரவுகள் கையெழுத்திட்ட அனைத்து நாடுகளையும் சட்டப்படி கட்டுப்படுத்தும். உங்கள் நாட்டின் அரசாங்கத்தை விட அந்த அமைப்பிற்கே அதிகாரம் அதிகமாக இருக்கும். டிஜிட்டல் அடையாளம், CBDC , உலகளாவிய சுகாதார அதிகாரம் ஆகிய மூன்று அமைப்புகளும் 2030-ஐ நோக்கி மிக வேகமாக நகர்கின்றன.
ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உலக மக்கள் யாரிடமும் இதற்கான சம்மதம் கேட்கப்படவில்லை! இவ்வளவு பெரிய திட்டத்தை சத்தமில்லாமல் நிறைவேற்ற அவர்களுக்கு என்ன தேவை?
மக்கள் தங்களை உற்றுப் பார்ப்பதைத் தடுக்க அவர்களுக்குப் பெரும் ‘கவனச்சிதறல்கள்’ அதாவது Distractions தேவைப்படுகின்றன.
தற்பொழுது நீங்கள் காணும் ஈரான் போர், உக்ரைன் போர், எரிசக்தி நெருக்கடி, Epstein files, வேற்றுக்கிரகவாசிகள் சம்மந்தமான செய்திகள் அனைத்தும் உங்களின் கவனத்தை சிதறடித்து  அசல் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பும் Distractionகளாக பயன்படுத்தப்டுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Thomas Massie இதை, “மக்களைப் பெருமளவில் திசைதிருப்பும் இறுதி ஆயுதம்” என்றே வர்ணித்துள்ளார்.
இந்தத் திசைதிருப்பல்கள் அனைத்தும் நமக்குப் பின்னால் நடக்கும் பெரும் மாற்றத்திற்கான கால அவகாசத்தை வாங்குவதற்காகவே.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த மூன்று அமைப்புகளும் முழுமையடைந்தால் உலகம் இப்படித்தான் இருக்கும்:
ஒரு மத்திய அமைப்பு( centralised )கட்டுப்படுத்தும் டிஜிட்டல் Identity யை நீங்கள் சுமக்க வேண்டி வரும். அவர்கள் நினைத்தால் முடக்கக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய டிஜிட்டல் பணத்தை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சர்வதேச அமைப்பின் சுகாதார விதிகளுக்குக் கீழ் நீங்கள் வாழ வேண்டி ஏற்படும். “உங்களிடம் எதுவும் இருக்காது, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” — ஏனெனில், மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை அந்த அமைப்பே தீர்மானிக்கும்!
உலகளாவிய நிறுவனங்களும் அமைப்புகளும் இத்தகைய பெரும் மாற்றங்களை 2030-க்குள் கொண்டு வர திட்டமிடுவதற்குப் பின்னால் இரு வேறுபட்ட பார்வைகள் மற்றும் காரணங்கள் உள்ளன.
ஒன்று, இந்த அமைப்புகளை உருவாக்குபவர்கள் கூறும் அதிகாரப்பூர்வக் காரணம்;
மற்றொன்று, சமூக மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கும் அதன் பின்னணி.
இன்றைய உலகம் முற்றிலும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பல பில்லியன் மக்களின் தரவுகள், பணப் பரிவர்த்தனைகள், மற்றும் சுகாதார விவரங்களை நிர்வகிக்க தற்போதைய பழைய நடைமுறைகள் போதாது என்று உலகப் பொருளாதார மன்றம் (WEF) போன்ற அமைப்புகள் கருதுகின்றன.
உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிஜிட்டல் அடையாளமும், உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பும் இருந்தால், அடுத்தடுத்த பெருந்தொற்றுகள் அல்லது காலநிலை மாற்ற நெருக்கடிகளை மிக வேகமாக, உலக அளவில் ஒரே நேர்க்கோட்டில் எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
காகிதப் பணத்தால் (Cash) வரி ஏய்ப்பு, கள்ளப்பணம், மற்றும் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துவது கடினம். எனவே, நிரலாக்கக்கூடிய டிஜிட்டல் பணத்தைக் கொண்டு வருவதன் மூலம், ஒவ்வொரு பைசாவின் நகர்வையும் கண்காணித்து, உலகப் பொருளாதாரத்தை ஒரு மையப் புள்ளியில் இருந்து சீரமைக்க முடியும் என்பது அவர்களின் திட்டம்.
“உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” என்ற வாசகத்தின் பின்னால் இருப்பது “பயன்பாட்டுப் பொருளாதாரம்” (Subscription/Sharing Economy) என்ற business model ஆகும்.
தற்போதைய தலைமுறையினர் வீடு, கார் போன்ற சொத்துக்களை வாங்குவதை விட, Netflix அல்லது Uber போன்ற சேவைகளை வாடகைக்கு (Subscribe) எடுத்துப் பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள்.
சொத்துக்களைத் தனி நபர்கள் சொந்தமாக வைத்திருப்பதைத் தவிர்த்து, நிறுவனங்கள் அல்லது அரசாங்கமே அனைத்தையும் நிர்வகித்து, மக்களுக்குத் தேவையான போது வாடகைக்குக் கொடுக்கும் ஒரு உலகத்தை அவர்கள் திட்டமிடுகிறார்கள். இது வளங்களைச் சேமிக்கும் என்பது அவர்களின் வாதம்.
நிபுணர்களின் மாற்றுப் பார்வையின்படி, இதன் உண்மையான நோக்கம் “அதிகாரக் குவிப்பு” ஆகும். 21-ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க சொத்து “தரவுகள்” (Data) தான். ஒரு மனிதனின் அடையாளம், அவனது பணம் செலவழிக்கும் விதம், அவனது ஆரோக்கிய நிலை ஆகிய மூன்றும் ஒரே மைய டிஜிட்டல் அமைப்பின் கீழ் வரும்போது, அந்த அமைப்பை இயக்கும் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் அதிகாரம் அளவிட முடியாதது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் யுகத்தில், உலக மக்கள்தொகையையும் அவர்களின் நுகர்வுத் தன்மையையும் (Consumption) எளிய முறையில் முழுமையாகக் கட்டுப்படுத்தவும், கணிக்கவும் இத்தகைய ஒரு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், உலகளாவிய நெருக்கடிகளைச் சமாளிப்பது என்ற பெயரில், உலகை இயக்கும் அதிகாரத்தையும் வளங்களையும் சில குறிப்பிட்ட உலகளாவிய அமைப்புகளின் கைகளுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு நீண்ட காலப் பொருளாதார மறுகட்டமைப்பே (The Great Reset) இந்த 2030 திட்டத்தின் பின்னணியாகும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசிக்காரர்களிடம் கவனம் தேவை! சிக்கலான குணமும் கணிக்க முடியாத நடத்தையும் கொண்டவர்கள் யார்?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி பகவானின் சக்திவாய்ந்த சஞ்சாரம்: ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளுக்கு 2027 வரை அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 21-ல் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசிகளுக்கு வருமான உயர்வு யோகம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சூரியன்–குரு இணைவால் உருவாகும் த்வித்வாதச யோகம்: ஜூலை வரை மேஷம், சிம்மம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி 2026: புதாதித்ய & பத்ரா ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு தொழில், செல்வம், அதிர்ஷ்டத்தில் ஜாக்பாட்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் நட்சத்திர மாற்றம் ஜூலை 2ல் நடைபெறுகிறது! இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

துவித்வாதச யோகம் 2026: சந்திரன் – புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

உச்ச குருவின் அருள், சனியின் சக்திவாய்ந்த பார்வை! இந்த 6 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படப் போகிறதா?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானின் அருள் அதிகம் கிடைக்கும் 4 ராசிகள்! வாழ்க்கையில் முன்னேற்றமும் செல்வ வளமும் பெறுவார்களா?

இந்தியா7 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்5 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வணிகம்4 நாட்கள் ago

SBI 5 ஆண்டு FD திட்டம்: ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? மூத்த குடிமக்களுக்கு கூடுதல் லாபம்!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.