Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

Published

on

  1. டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன? – டெல்லி உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு யோசனை.தலைநகரின் இயல்பு வாழ்க்கை தொடர் போராட்டங்களால் பாதிக்க்க் கூடாது. நகரை எக்காரணம் கொண்டும் தேவையற்ற நெருக்கடிக்கு உள்ளாக்க்க் கூடாது. – நீதிபதி அமித் மகாஜன்.
  2. நதிகள் இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டால் உடனே சொன்னபடி ரஜினிகாந்த் நிதி தருவார் – லதா ரஜினிகாந்த்.
  3. கடனைத் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தல் அநாகரிகமாக அல்லது மிரட்டும் வகையில் பேசக் கூடாது. இரவில் சென்று அழைக்கக் கூடாது. திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவ அவசர நிலை உள்ளிட்ட நேரங்களில் கடன் வாங்கியவர்களை தொடர்பு கொள்வதை தவிர்க்கவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்.
  4. தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; இதில் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை! நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது! – கனிமொழி எம்பி
  5. எந்த ஒரு நபரும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் தினசரி 20 நோட்டுகள் வரை கிழிந்த மற்றும் அழுக்கான நோட்டுக்களை ரூ.5000 வரை வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். – ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
  6. ஒருவர் இறப்பதற்கு முன்பு, அதற்குக் காரணமானவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகள், உண்மையானவை எனத் தோன்றி, அவரது மரணத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருந்தால், அவற்றை முதற்கட்ட மரண வாக்குமூலமாகக் கருதலாம் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  7. முறையான காரணம் ஏதுமின்றி, மனைவி தனது பெற்றோரிடமிருந்து தனியாக வாழ வற்புறுத்துவது மனரீதியான கொடுமைக்குச் சமம் என்று தீர்ப்பளித்து, கேரள உயர் நீதிமன்றம் ஒரு கணவருக்கு விவாகரத்து வழங்கியது. உண்மையான காரணம் ஏதுமின்றி, வயதான பெற்றோரை விட்டுப் பிரியும்படி துணைவரைக் கட்டாயப்படுத்துவது திருமணத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று நீதிமன்றம் கூறியது.
  8. லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் – ஐகோர்ட். நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ்அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்து விடுவீர்களா? – நீதிபதி சரமாரி கேள்வி.
  9. UPI பரிவர்த்தனை கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம். வங்கிகள் மற்றும் UPI நிறுவனங்கள் உள்கட்டமைப்பு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் முதலீடு செய்ய இந்த கட்டணம் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
  10. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் தும்மக்குன்று, மேகமலை பகுதிகளில் உள்ள 98 கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் உன்று கூறி வெளியேற்ற நினைக்கும் வனத்துறை மற்றும் ஒன்றிய அரசைக் ண்டித்து நேற்று 10000க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Osinbajo jets out to attend queen elizabeth ii funeral infinity loaded. The new management positions at pakistan software export board (pseb) islamabad 2025 provide a unique opportunity for qualified professionals to advance their careers in the it and management sectors. Rrb paramedical recruitment 2024, eligibility criteria, application form.