இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

- மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் தாமே வாதிடுவதற்காக உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்து வழக்கில் வாதிட்டுக்கொண்டிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
- உயர்நீதிமன்றங்கள் வழக்கின் தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டு நீண்ட நாட்களுக்கு தீர்ப்பு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது. – உயர்நீதிமன்றங்களுக்கான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.
- இளைஞர்களின் கனவுகளை பதிவுசெய்ய “என் கனவு என் எதிர்காலம்“ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
- ஆன்லைன் நிறுவனங்கள் காலாவதியான உணவு பொருட்களை விற்பதாக எழுந்த புகாரில் காலாவதியான பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு.
- ஜெய்ப்புரில் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து கிராம் ரூ.14900க்கும் சவரன் ரூ.119200க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.320க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.320000க்கும் விற்பனை ஆகிறது.













