இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.80 உயர்ந்து கிராம் ரூ.14030க்கும் சவரன் ரூ.112240க்கும் விற்பனை ஆகிறது.
இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.280க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.280000க்கும் விற்பனை ஆகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 3500 புள்ளிகளும் நிஃபடி 1200 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகிறது.
மெட்டாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை – தரவுகள் பகிர்வு என்ற பெயரில் தனிமனித உரிமையோடு விளையாடக்கூடாது. நாட்டு மக்களின் அந்தரங்க உரிமை பறிபோவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.
சென்னையில் கொல்லப்பட்ட பீகார் தம்பதி உடல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி பீகார் கொண்டு செல்ல ஏற்பாடு – முதல்வர் அறிவிப்பு













