இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.02.2026

இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.950 குறைந்து கிராம் ரூ.13950க்கும் சவரன் ரூ.111600க்கும் விற்பனை ஆகிறது.
இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.330க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.330000க்கும் விற்பனை ஆகிறது.
மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலகளவில் பாம்புக்கடியால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கம் ஒருவர் உயிரிழப்பு. – இது ஒரு மிகப் பெரிய சுகாதார நெருக்கடி – சுகாதாரத்துறை
புதிய அதிவேக ரயில் திட்டத்தின்படி சென்னையில் இருந்து பெங்களுருக்கு 1மணி 13 நிமிடத்தில் செல்ல முடியும் என ரயில்வே அமைச்சர் தெரிவிப்பு.
றே்றைய பட்ஜெட்ல வாரணாசி மற்றும் பாட்னாவில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்னு அறிவிச்சிருக்காங்க. – அந்த ரெண்டு ஊர்லேயும் கடலே இல்லையே எப்படி? பாட்னா கடலிலிருந்து 550 கி.மீ்தொலைவிலும் வாரணாசி கடலிலிருந்து 700 கி.மீ.தொலைவிலும் இருக்கிறதாமே.













