இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

- தெரு நாய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் காயங்களுக்கு அந்தந்த உள்ளுர் நிர்வாகங்கள் மற்றும் றாய்களுக்கு உணவு வைப்போர்களையயே பொறுப்பாக்குவோம். என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.
- மதுரை மக்களின் மனநிலைக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்று எண்ணி மதுரை பயணதிட்டத்தை சென்னைக்கு மாற்றி மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார் மோடி.
- விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்“ பட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஜனவரி 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கும். – உச்சநீதிமன்றம்.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.13290க்கும் சவரன் ரூ.106320க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.3 உயர்ந்து கிராம் ரூ.310க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.310000க்கும் விற்பனை ஆகிறது.
- தமிழ்நாட்டின் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் எதிரே உள்ள இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தில் முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோட்டிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அல்ட்ராசானிக் முறையில் இயங்கக்கூடிய இந்த இயந்திரம் மூலம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 70 அல்வா துண்டுகள் கட் செய்து பேக்கிங் செய்யப்படுகிறது. ரூ.10க்கு புதியதாக அறிமுகமாகி மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது “பைட்ஸ் அல்வா“.













