இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.50 குறைந்து கிராம் ரூ.12750க்கும் சவரன் ரூ.102000க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.272க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.272000க்கும் விற்பனை ஆகிறது.
- நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வார கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியம் அறிவிப்பு
- நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பது காலதாமதம் ஆவதால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு
- ஐஸ்லாந்து மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதிகளில் அமெரிக்க மற்றும் ரஷ்ய போர்க்கப்பல்கள் மிக நெருக்கமாக தென்படுவதால் எந்த நேரத்திலும் ஒரு மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
- வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்று வரும் நிலையில் அவற்றுக்கு பாதுகாப்பாக ரஷ்யா தனது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் போர்க்கப்பல்களையும் களமிறக்கியுள்ளதால் இரு நாடுகளுக்கிடையே நேரடி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
- பிரான்ஸ் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவு பவுடர் ஃபார்முலாவை திரும்ப பெற்றுள்ளது. “Cereulide” என்ற நச்சுப்பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை.
- கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்கா – உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை
- அதிமுகவில் ஓபிஎஸ் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை – எடப்பாடி பழனிச்சாமி
- பூமியைக் காப்பாற்ற கனரக தொழில்கள் மற்றும் டேட்டா மையங்கள் விண்வெளிக்கு நகர வேண்டும் – ஜெஃப் பெசோஸ்
- இந்தியாவுக்கான விசா தூதரக சேவைகளை நிறுத்தியது வங்கதேசம்
- ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது 500% வரி விதிக்கும் மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்
- பராசக்தி படத்தையும் ஜனநாயகன் என்று ரிலீஸ் ஆகுதோ அன்று திரையிட முடிவு
- அன்புமணி இப்படி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது. மருத்துவர் ராமதாஸ்
- வீடுகள் பட்டியலிடும் பணியுடன் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்ரல் 1ம் தேதி தொடக்கம். – ஒன்றிய அரசு அறிவிப்பு













