Connect with us

இந்தியா

இந்தி மூலம் தமிழ் கற்கும் வகையில் இணையவழி சான்றிதழ் படிப்பு – செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் விரைவில் அறிமுகம்

Published

on

இந்தி மூலம் தமிழ் கற்கும் வகையிலான இணையவழி சான்றிதழ் படிப்பு ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் கற்பதற்கு இதே போன்ற சான்றிதழ் படிப்புகள் செம்மொழி நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவன இயக்குநர் இரா.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் 2022 ம் ஆண்டு வெளியிடப்பட்து. தற்போது இது 5வது பதிப்பை எட்டியுள்ளது. இந்தியில் மொழிபெயர்க்கப்படும் தமிழ் நூல்கள் வட மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வட மாநிலங்களில் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் குறித்த கருத்தரங்குகள் விவாதங்கள் நிறைய நடைபெற்று வருகின்றன. நமது இலக்கியங்களை இந்தி மொழியில் வடமாநிலத்தவர் புரிந்துகொண்டு நமது வரலாறு பண்பாட்டை புரிந்து கொள்கின்றனர்.

இந்த நிறுவனத்தின் மூலமாக திருக்குறள் இதுவரை 25 இந்திய மொழிகளில் மற்றும் 9 வெளிநாட்டு மொழிகளில் என மொத்தம் 34 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் பொங்கல் திருநாளன்று 23 இந்திய மொழிகள் மற்றும் 7 வெளிநாட்டு மொழிகள் என மொத்தம் 30 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட உள்ளது. இவற்றில் நீலகிரியில் பேசக்கூடிய இருளர், காட்டுநாய்க்கர் உள்ளிட்ட பழங்குடியின மொழிகளும் அடங்கும்.

உலகம் முழுதும் 100 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டு 2026ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் நமது தமிழ் பாரம்பரியம் உலகம் முழுதும் பரவச் செய்ய இலக்கை அடையத்் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தி மூலம் தமிழ் கற்பதற்காக தலா 30 நிமிடங்கள் கொண்ட 90 காணொலிகள் செம்மொழி நிறுவனத்தில் உருவாக்கியுள்ளோம். இவை விரைவில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த காணொலிகளின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பாடப்பொருள் தொடர்பாக சில வினாக்கள் இடம் பெற்றிருக்கும். நான்கு மாதங்களுக்கு பிறகு இ.தற்கான தேர்வு நடத்தப்பட்டு கற்போருக்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Show a live countdown to the big day so guests can feel the excitement building..