ஆன்மீகம்
இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
வானியல் மற்றும் நேரக் கணக்கீட்டில் உலகிற்கே முன்னோடியாக இருந்த பழங்கால இந்திய வானியல் வல்லுநர்கள் நேரத்தைக் கணக்கிட மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி நகரத்தைத்தான் உலகின் மையப் புள்ளியாக ஜீரோ மெரிடியனாக கருதினர்.
உஜ்ஜயினியில் உள்ள மகா காலேஷ்வர் கோவில் காலத்தின் கடவுளாகப் போற்றப்படுகிறது. அங்கிருக்கும் ஜந்தர் மந்தர் வானியல் ஆய்வகம் துல்லியமான காலக் கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் 1905 ம் ஆண்டில் இந்திய திட்ட நேரம் ஐ.எஸ்.டி என்பதனை அதிகாரபுர்வமாக நடைமுறைப்படுத்தினர். இது உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் அருகே மிர்சாபுர் வழியாகச் செல்லும் 82.5 கிழக்கு தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டது.
தற்போது உலகளாவிய கிரீன்விச் சராசரி நேரத்தை விட ஜி.எம்.டி இந்தியா 5 மணி நேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது. இருப்பினும் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கிடையே சூரிய உதயத்தில் சுமார் 2 மணி நேர வித்தியாசம் உள்ளது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய திட்ட நேரத்திற்கு பதிலாக மகா கால் ஸ்டாண்டர்டு டைம் என்ற முறையை கொண்டுவர ஆலோசனை செய்யப்படுவதாக கூறி உள்ளார்.
அதாவது உலச நேரக் கணக்கீட்டின் தொடக்கப்புள்ளி லண்டனில் உள்ள கிரீன்விச் அல்ல. மாறாக இந்தியாவில் உஜ்ஜயினிதான் என்று உலகிற்கே பறைசாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இது ஆங்கிலேயர்களின் அடையாளங்களை அகற்றி பழங்கால முறையை நவீன அறிவியலுடன் மீண்டும் கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மகா கால் ஸ்டாண்டர்டு டைம் எம்.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தால் இந்திய காலக் கணக்கீட்டிலும் தொழில்நுட்பத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது இந்திய நேரமானது தற்போதிலிருந்து சுமார் 27 நிமிடங்கள் பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது.
மேலும் நமது பஞ்சாங்கங்கள் மற்றும் ஜோதிடக் கணக்கீடுகள் ஏற்கனவே உஜ்ஜயினி நேரத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இந்த எம்.எஸ்.டி. வருவதன் மூலம் இந்தியாவில் உள்ள அணைத்து கணிணிகள் ஸ்மார்ட் போன்கள் கடிகாரங்கள் சர்வர்கள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்.
சர்வதேச நேரம் இந்திய ஜிஎம்டியை விட 5 மணி 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது. இது உஜ்ஜயினிக்கு மாறினால் 5.03 மணி நேரமாக இருக்கும். இது சர்வதேச விமான போக்குவரத்து நேரம் மற்றும் பங்கு சந்தை நேரங்களில் மாற்றங்களை உண்டாக்கக்கூடும்.













