இந்தியா
இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்… வாட்ஸ்அப்பிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தனியுரிமைக்கொள்கை தொடர்பாக மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்-வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213.10 கோடி அபராதம் விதித்துள்ளது.
வாட்சப் நிறுவனம் தனது ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டே இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இன்றைய விசாரணையில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நமது தனிப்பட்ட தரவுகள் விற்கப்படுவதோடு வணிக ரீதியாகவும் சுரண்டப்படுகிறது என்று வாதிட்டார். வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் மெட்டா பிளாட்பார்ம் நிறுவனத்திறகுக கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நாட்டிலே தனியுரிமை போற்றிப் பாதகாக்கப்படுகிறது. எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். எந்தவொரு குடிமகனின் தனியுரிமையும் சமரசம் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என நீதிபதிகள் கூறினர்.
மேலும் இந்த வழக்கில் வருகிற 9ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.













