சினிமா
இதுல மட்டும் கரெக்ட்டா போட்டி போடுறாரே அஜித்; லியோ விஜய் வீடியோ வந்த உடனே வெளியான பிக்!

லியோ படத்தின் அப்டேட் வெளியான உடனே அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்களும் வெளியாகி உள்ள நிலையில், ஏகே 62 படத்தின் அப்டேட் வருதோ இல்லையோ இதில் மட்டும் கரெக்ட்டா போட்டிப் போடுறாரே அஜித் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித் தனது துணிவு படத்தை வெளியிட்டார். ஆனால், வசூல் ரீதியாக விஜய்யின் வாரிசு படம் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

#image_title
அதனை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தின் அறிவிப்புடன் ஏகே 62 படத்தின் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், கடைசியில் லியோவுக்கு போட்டி போடும் அளவுக்கு விக்னேஷ் சிவனின் கதையில் நம்பிக்கை இல்லை என்கிற நிலையில் தான் விக்னேஷ் சிவனையே அஜித் மாற்றினார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை வெளியேற்றிய நிலையில், அடுத்ததாக மகிழ் திருமேனி படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா தரப்பு இன்னமும் வெளியிடவில்லை.

#image_title
ஏகே 62 படத்தை முடித்து விட்டு தனது உலக பைக் டூர் பயணத்துக்கான ஏற்பாடுகளை அதி தீவிரமாக பார்த்து வருகிறார் அஜித். இந்நிலையில், லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்து கொண்ட வீடியோ வெளியான நிலையில், உடனடியாக அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி #AjithKumar ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் அப்படியே வலிமை பட கெட்டப்பில் ஒயிட் ஹேரில் அப்படியே ஹாலிவுட் நடிகர் போல காட்சி தரும் புகைப்படங்கள் அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வெளியாகி உள்ளன. அந்த ஏகே 62 அப்டேட் எப்போ வரும் என்றும் சொல்லிவிட்டால் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.