Connect with us

இந்தியா

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

Published

on

கொரோனா காலகட்டத்தில் இந்திய குடிமக்கள் அணைவரின் அன்றாட செயல்பாடுகளுக்கு “ஆரோக்கிய சேது“ செயலி தவிர்க்க முடியாததாக விளங்கியது. இந்த ஆரோக்கிய சேது செயலி இப்போது புதிய பரிமாணத்தை அடைந்து “ஆரோக்கிய சேது 2.0“ என்ற புதிய வடிவில் மீண்டும் படிப்படியாக கட்டாய பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா “ஆரோக்கிய சேது 2.0 “ செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

“ஆயுஷ்மான் பாரத்“ எண்ம திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலி இனி வெறும் தொற்றுநோய் கண்காணிப்புக்காக மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியரின் “எண்ம மருத்துவ நாள்காட்டி“ ஆக மாறவிருக்கிறது.

இதில் (6) ஆறு முக்கிய சிறப்பம்சங்கள் இடம் பெற உள்ளன.

  1. முழு குடும்பமும் ஒரே கணக்கில் :

இனிமேல் வீட்டில் உள்ள முதியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு என    தனித்தனி கைபேசிகளில் இந்த செயலியை நிறுவத் தேவையில்லை.          ஆரோக்கிய சேது செயலியில் ஒரே கணக்கின் கீழ் பெற்றோர் கணவன்     அல்லது மனைவி மற்றும் குழந்தைகளின் மருத்தவ விவரங்களை இணைத்து          நிர்வகிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

  1. ஏ.ஐ.மருத்துவ ஆவணங்கள் :

உங்கள் பழைய பரிசோதனை அறிக்கைகள் மருந்துச் சீட்டுகளை பிடிஎஃப் அல்லது புகைப்படமாக செயலியில் பதிவேற்றம் செய்தால் போதும். அதில் உள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் சீட்டில் உள்ள தகவல்களை உடனடியாக எண்ம ஆவணங்களாக மாற்றி உங்களுக்கான பிரத்யேக சுகாதார தகவல் பலகையை (ஹெல்த் டேஷ் போர்டு) உருவாக்கித் தரும்.

  1. பிஎம்ஜேஏஒய் வாலெட் :

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் தங்களுக்கு இன்னும் எவ்வளவு மருத்துவக் காப்பீட்டுத் தொகை பாக்கி உள்ளது, குடும்பத்தில் யார் யார் எவ்வளவு பயன்படுத்தியுள்ளனர் என்ற விவரங்களை இந்த வாலெட் மூலம் வெளிப்படையாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

  1. ஸ்மார்ட் வாட்சுடன் இணைக்கும் வசதி :

உங்களின் ஸ்மார்ட் வாட்சில் உடல் தகுதியைப் பின்தொடருதல் (ஃபிட்னஸ் டிராக்கர்) வசதியை இந்த செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களின் தினசரி நடைப்பயிற்சி இதயத்துடிப்பு கலோரி எரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவைச் செயலியே தொடர்ந்து கண்காணிக்கும்.

  1. அவசரகால உதவிகள் :

உங்கள் இருப்பிடத்துக்கு அருகே இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமின்றி “        இ-ரக்த்கோஷ்“(e-Raktkosh) மூலம் அருகில் உள்ள ரத்த வங்கிகளில்         தற்போதைய ரத்த இருப்பு விவரம் மற்றும் அவசர ஊர்தியை முன்பதிவு செய்யும் வசதியும்  இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

  1. மருந்து நினைவூட்டல் :

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை நோயாளிகள் சரியான நேரத்துக்கு உட்கொள்வதை உறுதி செய்ய “டோஸ்“ மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு “நினைவூட்டல்“ நிர்ணயித்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவமனைகளில் வரிசையில் நிற்காமல் “ஜ்கேன் அன்ட் ஷேர்“ முறையில் புறநோயாளி சிகிச்சை (ஓபிடி) பெறும் வசதியும் இந்த செயலியில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த செயலியை எப்படி நிறுவுவது?

உங்களுடைய கைப்பேசியில் செயலி பதிவிறக்க தளத்தில் ஆரோக்கிய சேது (Aarogya Setu) என ஆங்கிலத்தில் தட்டச்ச செய்து பதிவிறக்கம் செய்தால் ஆரோக்கிய சேது 2.0 செயலி பதிவிறக்கமாகும். பிறகு உரிய அனுமதிகளை வழங்கியதும் உங்களுடைய விருப்ப மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்தவுடன் வரும்“ கடவுச் சொல்லை செயலியில் குறிப்பிட்டவுடன் உங்கள் ஆதார் எண்ணில் உள்ள தரவுகளை செயலி காண்பிக்கும். அதில் உங்கள் பெயருக்குரிய தரவை தேர்வு செய்ய வேண்டும். பிறகு சுகாதார லாக்கரில் விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்திருக்காவிட்டால் உங்களுடைய ஆதார் எண்ணை செயலி கேட்கும். அதனை உள்ளீடு செய்த பிறகு மீண்டும் 6 இலக்க கடவுச்சொல் குறுஞ்செய்தியாக வரும். அதனை உள்ளீடு செய்த பிறகு ஓராண்டுக்கு செல்லத்தக்க தரவு சரிபார்ப்புக்கான அனுமதி உங்களிடம் பெறப்படும். உடனே சுகாதார லாக்கர் வெற்றிகரமாக செயலியில் நிறுவப்பட்டதாக தகவல் வரும்.

பிறகு குடும்ப மேலாண்மை பிரிவில் “குடும்பத்தை நிர்வகி“ என்ற பகுதிக்குள் சென்றால் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை பதிவேற்றிக் கொள்ளலாம். இதேபோல் மேலே சொன்ன ஆறு அம்சங்களின் சேவைகளுக்கான தகவல்களையும் பெற தனித்தனி இணைப்புகள் செயலியில் இடம்பெறும். அவற்றைச் சரியாக உள்ளீடு செய்து பலன் அடையலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

தினபலன்27 minutes ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா14 மணி நேரங்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா2 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்2 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

வணிகம்3 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா3 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

Translate »
Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. wi fi – 全覆蓋系列.