Connect with us

ஆன்மீகம்

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Published

on

நாம் நம்மைச் சுற்றி அன்றாடம் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வு என்னவென்றால் ஏதாவது ஒரு அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தையோ ஆக்கிரமிக்க நினைப்பவர்கள் இரவோடு இரவாக அந்த இடத்தில் ஒரு கோயிலை உருவாக்குவது அல்லது சில கட்டுக்தைகளை வதந்திகளாக பரப்பி அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை படிப்படியாக ஆக்கிரமித்துக் கொள்வது ஆகும். பின்னாளில் அரசு அந்த இடத்தை எடுத்துக்கொள்ள சட்டப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் மறியல் என்று போராட்டங்கள் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இவையெல்லாம் சரியா? என்பது குறித்த விவாதங்களின் விளைவே உங்களுக்கு இந்த வழக்கின் மூலமாக கிடைத்திருக்கிறது.

அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பொதுப் பாதைகள் என்பவை யாருடைய தனிச்சொத்தும் அல்ல. அவற்றை மதம், வழிபாடு, பழக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிக்க முடியாது என்பதை வலியுறுத்தும் முக்கியமான தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வழக்கு விவரம்

வழக்கு எண்: W.P.(MD) No.2646 of 2026

தீர்ப்பு நாள்: 06.02.2026

நீதிமன்றம்: Madurai Bench of Madras High Court

தீர்ப்பின் மையக் கருத்து

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டிருந்தாலும், அதற்கு நீதிமன்ற பாதுகாப்பு கிடையாது என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுப் பாதையை மறித்து, அல்லது நீர்நிலையின் கரைப்பகுதி போன்ற இடங்களில் கட்டப்பட்ட வழிபாட்டு அமைப்புகள் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம் கூறிய முக்கிய அம்சங்கள்

அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை.

நீர்நிலைக் கரை மற்றும் பொதுப் பாதையை மறிக்கும் கட்டிடங்கள் அகற்றப்படலாம்.

மின்சாரம் இணைப்பு அல்லது வரி மதிப்பீடு இருந்தாலே உரிமை உருவாகாது.

Places of Worship (Special Provisions) Act, 1991 என்ற சட்டம், அரசு நில ஆக்கிரமிப்பை காப்பாற்றுவதற்காக அல்ல. அது 15.08.1947 அன்று இருந்த மத வழிபாட்டு இடங்களின் மத அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே இயற்றப்பட்டது என்று நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றம் பரிசீலித்த சட்டங்கள்

  1. Tamil Nadu Local Bodies Act, 1998 – Section 128

பொதுநில ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

  1. Places of Worship (Special Provisions) Act, 1991

இந்தச் சட்டம் அரசு நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தாது என்று நீதிமன்றம் கூறியது.

  1. இந்திய அரசியலமைப்பு – Articles 14, 25, 26, 300-A

இந்த பிரிவுகள் முன்வைக்கப்பட்டாலும், மதச்சார்பு சுதந்திரம் என்பது அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் உரிமை அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

  1. O.(Ms) No.205, Revenue & Disaster Management Dept., dated 26.04.2025

இந்த அரசாணை வசிப்பிட residential encroachment-ஆக்கிரமிப்புகளை சில சூழல்களில் regularise செய்வதற்கானது; அரசு நிலத்தில் கட்டப்பட்ட கோயில் போன்ற non-residential religious encroachment-களுக்கு இது பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பின் சட்டப் பார்வை

மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால், அந்த உரிமையின் பெயரில்: அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது நீர்நிலையை மறிக்க முடியாது பொதுமக்கள் பயன் பெறும் பாதையை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது என்பதையே இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது.

இந்த தீர்ப்பு ஏன் முக்கியம்?

தமிழ்நாட்டில் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வலுவான முன்னுதாரணம்

“மதம்” என்ற பெயரில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளுக்கு தெளிவான எச்சரிக்கை

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையை மீண்டும் நினைவூட்டும்

தீர்ப்பு சுருக்கமாக

மதச்சார்பு சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்டது. அரசு நிலம் பொதுமக்களின் சொத்து.

அதை எந்த பெயரிலும் ஆக்கிரமிக்க முடியாது. கோயில் என்ற பெயர் வைத்தாலும், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக்கு சட்டம் பாதுகாப்பளிக்காது.

எந்த மதக் கோயிலாக இருந்தலும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டதுதான் என்பதை இந்த தீர்ப்பு நிலை நாட்டியுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசிக்காரர்களிடம் கவனம் தேவை! சிக்கலான குணமும் கணிக்க முடியாத நடத்தையும் கொண்டவர்கள் யார்?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி பகவானின் சக்திவாய்ந்த சஞ்சாரம்: ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளுக்கு 2027 வரை அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஜூன் 21-ல் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசிகளுக்கு வருமான உயர்வு யோகம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன்–குரு இணைவால் உருவாகும் த்வித்வாதச யோகம்: ஜூலை வரை மேஷம், சிம்மம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி 2026: புதாதித்ய & பத்ரா ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு தொழில், செல்வம், அதிர்ஷ்டத்தில் ஜாக்பாட்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் நட்சத்திர மாற்றம் ஜூலை 2ல் நடைபெறுகிறது! இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

துவித்வாதச யோகம் 2026: சந்திரன் – புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

உச்ச குருவின் அருள், சனியின் சக்திவாய்ந்த பார்வை! இந்த 6 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படப் போகிறதா?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் அருள் அதிகம் கிடைக்கும் 4 ராசிகள்! வாழ்க்கையில் முன்னேற்றமும் செல்வ வளமும் பெறுவார்களா?

இந்தியா6 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்5 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வணிகம்4 நாட்கள் ago

SBI 5 ஆண்டு FD திட்டம்: ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? மூத்த குடிமக்களுக்கு கூடுதல் லாபம்!

Translate »
Get my ad bar.